மக்கள் நீதி மய்யம் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை அச்சுறுத்தும் வகையில் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கருத்துரிமையின் மீது ஆளும் பாஜக அரசு தொடர்ந்து போர்தொடுத்து வருகிறது. இந்த சர்வாதிகாரப்போக்கை ஏற்க இயலாது. பொதுவாழ்வில் யாரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.
இவ்வாறு செந்தில் ஆறுமுகம் கூறியுள்ளார்.