வாக்காளர் அட்டையுடன் ஆதார்: மக்கள் நீதி மய்யம் அறிக்கை

0

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்களை இணைப்பது, போலி வாக்காளர் பட்டியல் களை நீக்குவதற் கான ஆத்மார்த்தமான முயற்சி யாக இருக்கவேண்டும என மக்கள் நீதி மய்யம் மாநில துணை தலைவர் ஆர்.தங்கவேல் அறிக்கை யில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

கடந்த ஏப்ரலில் தனது முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது மக்கள் நீதி மய்யம். தேர்தல் முடிந்த பிறகு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் சந்தித்து அளித்த மனுவில், ஒரே நபர் பல வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்தி ருப்பது தொடர்பாக, கீழ்காணும் விஷயங் களையும் குறிப்பிட்டிருந் தோம்.
1) நடைபெற்ற தேர்தலில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு, வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களித்த சம்பவங்கள் நடந்துள்ள தாகக் கேள்விப்படு கிறோம். எங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங் களை இத்துடன் இணைத் துள்ளோம்.

2) ஒரே வார்டில், ஒரே முகவரியில் வசிக்கும் ஒருவருக்கு அவரது பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தகவல்களுடன் ஒன்றிற்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வெவ்வேறு எண்களுடன் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம்.

3) வெவ்வேறு வழிகளில் விண்ணப்பித்து ஒன்றிற்கும் மேற்பட்ட அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்பவர்கள், தேர்தல் நாளன்று வெவ்வேறு வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கிறார்கள். தனக்கு தோல் ஒவ்வாமை உள்ளது என்று சொல்லி, நகத்தில் மட்டும் மை வைத்துக்கொள்கிறார்கள். பின்னர், அதை ரிமூவர் மூலம் அழித்துவிட்டு வாக்கு இருக்கும் இன்னொரு வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கிறார்கள் என்று எமது கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

4) வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் போது மிகவும் கவனத் துடன் இருக்கவேண்டிய பொறுப்பு, தேர்தல் ஆணையத்திற்கு இருக் கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெருகிவிட்ட சூழலில், விதிமுறை களைச் செயல்படுத் துவதற்கும், கண்காணிப் பதற்கும் அல்லது முறை கேடுகள் நடப்பதைக் கண்டறிவதற்கும் எளிய வழிகள் பல இருக் கின்றன.

5) வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் மேலும் துல்லியமாக நிகழ்வதை, தேர்தல் ஆணையம் உறுதி செய்யவேண்டும்.
மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைக்குத் தீர்வாக சில பரிந்துரை களையும் அந்த மனுவில் தெரிவித்திருந்தோம்.
வாக்காளர்கள் பட்டியல் குறித்து வீடுகளுக்குச் சென்று சரிபார்க்கலாம். அப்படியே இல்லையென் றாலும் ஆதார் கார்டு எண் அல்லது மொபைல் எண் ஆகியவற்றின் உதவி யோடு போலி வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் கண்டறிந்து உடனடியாக நீக்கலாம். சமீபத்திய இந்தியத் தேர்தல்களில் 17 வாக்குகள் வித்தி யாசத்தில் சட்டமன்றத் தேர்தலிலும், 44 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளு மன்றத் தேர்தலிலும் முடிவு வருகிறது.

இப்படியான சூழலில், தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் வாக்காளர் பட்டியல் மற்றும் அடையாள அட்டைகளை இறுதி செய்ய வேண்டும். தொழில்நுட்பத்தின் துணையுடன் மேலும் துல்லியமாகச் செயல்பட வேண்டியது அவசியமா கிறது.

தற்போது பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்கும் மசோதாவை நிறை வேற்றியுள்ளது. எதிர்க் கட்சிகள் எழுப்பும் பல சந்தேகங்களும் கேள்வி களும் மக்கள் நீதி மய்யத்திற்கும் இருந் தாலும், போலி வாக்காளர் அடையாள அட்டைகளை நீக்கம் செய்வதற்கான முதற்படியாக இந்த முயற்சி அமையவேண்டும் என நினைக்கிறோம்.
வாக்காளர் பட்டியலில் வெவ்வேறு பெயர்களில் தங்களைப் பதிவு செய்து கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு வாக்குப்பதிவு செய்ய முயல்பவர்கள் ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பவர்கள். வாக்காளர் பட்டியலிலி ருந்து இந்தப் போலிகள் நீக்கப்படுவதற்கான முயற்சிகளில் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் ஈடுபட வேண்டு மென மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள் கிறது.

இவ்வாறு ஆர்.தங்கவேலு கூறியுள்ளார்

 

 

Leave A Reply

Your email address will not be published.