மாநகர காவல் பட இயக்குனர் தியாகராஜன் காலமானார்

6

ஏவிஎம் தயாரிப்பில் விஜயகாந்த் நடிப்பில் ‛மாநகர காவல்’ என்ற வெற்றி படத்தை தந்த இயக்குனர் எம்.தியாக ராஜன், சென்னை மாநகர தெருக்களில் அநாதை யாக அலைந்து திரிந்து கவனிப்பாரின்றி இன்று(டிச.,8) இறந்து கிடந்தார். அவரது உடலை ‛மாநகர காவல்’ துறை யினர் எடுத்து மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மாநகர காவல் என்ற பெயரில் படம் எடுத்த இயக்குனரை திரையுலகினர் கைவிட்ட நிலையில் மாநகர காவல் துறையே கடைசியில் உதவி செய்தது தற்செயலாக அமைந்தது.

பிரபு நடித்த ‛வெற்றி மேல் வெற்றி’, ‛பொண்ணு பார்க்க போறேன்’, ஏவி.எம்.மின் 150வது படமான விஜயகாந்த் நடித்து வெளியான ‛மாநகர காவல்’ ஆகிய படங்களை இயக்கியவர் எம்.தியாகராஜன். இன்று அதிகாலை சென்னையில் ஏ.விஎம்.எம். ஸ்டுடியோ எதிரிலேயே தெருவோர மாக அனாதையாக இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், கே.எம்.சி.மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் தியாகராஜன். சினிமா தொடர்புடைய டிஎப்டி(DFT) படித்த இவர், ஆரம்பகாலத்தில் சொந்த ஊர் அருகே விபத்தில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்று பின் அதிலிருந்து மீண்டு சினிமாவில் படங்கள் இயக்கினார். சினிமாவில் வெற்றி மேல் வெற்றி, மாநகர காவல் என இரு படங்களை இயக்கினாலும் அதன்பின் அவரால் சினிமாவில் சோபிக்க முடியவில்லை.

வடபழனியில் அழுக்கான உடை, கையில் செய்திதாளோடும் அம்மா உணவத்தின் ஆதரவிலும் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். சினிமாவில் வெற்றி மேல் வெற்றி என அவர் படம் கொடுத்திருந்தாலும் நிஜ வாழ்வில் அவர் வெற்றி மேல் வெற்றி பெறாதது சோகம் என்றாலும் இப்படி அனாதையாக இறந்து கிடந்தது பெரும் துயரம் என்றே சொல்லலாம்.

இவரின் மறைவு குறித்து இணை இயக்குனர் நீலன் கனிஷ்கா என்பவர் சமூகவலைதளத்தில், ‛‛சினிமாவில் வெற்றி மேல் வெற்றி அடையாமல் ஏவிஎம் முன்பாகவே உயிரிழந்து, மாநகர காவல் துணையோடு அன்னாரின் இறுதி நாள் இப்படியாக முடிந்தது காலத்தின் கோலமின்றி வேறென்ன..?

நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ…!!!”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

கடைசியாக வந்த தகவல் : அவருடைய அண்ணன் விஜயகுமார் அருப்புக்கோட்டை தொகுதி ex MLA., நாளை நேரடியாக வந்து அடக்கம் செய்ய உள்ளார்.

தியாகராஜனின் மனைவி பத்து வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டார். மகள், மகன் பெங்களூரில் இருக்கிறார்கள்.

எம்.தியராஜன மறைவுக்கு விஜயகாந்த், அவர் குடும்பத்தினர் சார்பில், மறைந்த எம்.தியாகராஜன் தம்பியும், முன்னாள் எம்எல்ஏவுமான விஜயகுமாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை அருப்புகோட்டையில் நடக்கும் எம்.தியாகராஜன் இறுதி சடங்கில் தேமுதிக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்றும் தெரிவித்துக்கப்பட்டுள்ளது.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.