மரைக்காயர் அரபிக்கடலின்  சிங்கம் (திரைப்பட விமர்சனம்)

22

படம்: மரைக்காயர் அரபிக்கடலின்  சிங்கம்

நடிப்பு: மோகன்லால், பிரபு,  அர்ஜுன், சுனில் ஷெட்டி, நெடுமுடி வேணு, அசோக் செல்வன், சுஹாசினி,  கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், கல்யாணி

இசை: ரோனி ரபேல்

பின்னணி இசை – ராகுல் ராஜ் , அன்கித் சூரி ,லில் இவான்ஸ் ரோடர்

ஒளிப்பதிவு : எஸ்.திருநாவுக்கரசு

வசனம் ஆர் பி பாலா

தயாரிப்பு: ஆசிர்வாத் சினிமாஸ், ஆண்டனி பெரும்பவூர்

இயக்கம்: பிரியதர்ஷன்

தமிழ்நாடு ரிலீஸ்: வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு

கேரள நாட்டின் கோழிக்கோட்டு பகுதியில் 16ம் நூற்றாண்டில்  வியாபாரம் பெருக்க திட்டமிடும் போர்ச்சுகள் நாட்டு படைஅந்நாட்டு மன்னர்  சாமுதிரிக்கு எச்சரிக்கை விடுக்கிறது.  தங்களின் ஆணைகளுக்கு கட்டுப்படாவிட்டால் போர் தொடுப்போம் என்று மிரட்டுகிறது. அதை ஏற்காத சாமுத்ரி மன்னர் கடலில் வரும்  அந்நிய நாட்டு கப்பல்களை மடக்கி கொள்ளையடிக்கும் 4வது மரைக்காயர் பரம்பரையை சேர்ந்த குஞ்ஞாலியின் உதவியை நாடுகிறார். மன்னரின் கோரிக்கையை ஏற்று அவருடன் கைகோர்க்கும் குஞ்ஞாலி போர் தொடுக்க வரும் போர்ச்சுகள் கப்பற்படையை நடுக்கடலிலேயே  வழிமடக்கி சின்னாபின்னமாக்குகிறார். அதைக்கண்டு மகிழ்ந்த மன்னர் போராளி குஞ்ஞாலியின் கோரிக்கைப்படி அதே பகுதியில் குடியிருப்பு எற்படுத்தி அவரது மக்களுடன் வசிக்க அனுமதி தருகிறார். குஞ்ஞாலியின் வளர்ச்சியை பிடிக்காத குறுநில மன்னர்களும் அரசைவை  மந்திரி  மகனும் அவரை அழிக்க நேரம்பார்த்து காத்திருக்கின்றனர். மன்னர் அங்கீகரித்த திருமணம் ஒன்றை  தடுத்து நிறுத்தியதாக குஞ்ஞாலி மீது பழி சுமத்தி அவரை மன்னருக்கு எதிரியாக சித்தரிக்கின்றனர். இந்நிலையில் போர்ச்சுக்கள் படையுடன் கைகோர்க்கும் புதிய மன்னர், கடற்படை தளபதியான குஞ்ஞாலியை சரண் அடைய கேட்கிறார். அதை ஏற்காத குஞ்ஞாலி இருநாட்டு படைகளையும் மக்களின் துணையுடன் எதிர்கிறார். அதில் அவர் தோற்க்கடிக்கபட்டு சிறை பிடிக்கப்படுகிறார். மன்னிப்பு கேட்டால் தண்டனையை குறைப்பதாக போர்ச்சுகள் சபை நிபந்தனை விதிக்கிறது. அதை குஞ்ஞாலி ஏற்க மறுப்பதால் அவரது தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றுகிறது அந்நிய நாட்டு அரசு.

சரித்திர படங்கள் எடுப்பதென்பது பெரும் காரியம் அதை செவ்வனே சிறப்பாக படமாக்கி முடித்திருக்கிறார் பிரியதர்ஷன். குஞ்ஞாலி என்ற பாத்திரத்தில் மோகன்லால் மிக அற்புதமாக நடித்து கடைசி வரை கம்பீரத்துடன் கதையை கொண்டு செல்ல துணை நின்றிருக்கிறார். எதிரி நாட்டு படைகளை நடுக்கடலில் மடக்கி அழிக்கும் போர் தந்திரம் போர்ச்சுகள் படையை திணறடிக்கிறது.  தன் அன்னையின் கழுத்தை அறுத்து கொன்ற வெள்ளையன் தலைவனை அதேபோல் கழுத்தறுத்துக்கொன்று பழி தீர்க்கும்போது மோகன்லால் நடிப்பில் கோபம் கொப்பளிக்கிறது.

மோகன்லால் அர்ஜுனுடன் மோதும் கத்தி சண்டை காட்சி பரபரப்பை ஏற்படுத்துகிறது. அந்தரத்தில் பறந்து வந்து அர்ஜுனை வெட்டி வீழ்த்தும்போது அரங்கமே அமைதிக்கடலாகிறது.

மோகன்லாலின் இளவயது பாத்திரத்தில் அவரது மகன் பிரணவ் மோகன்லாலே நடித்திருப்பது ஏகப்பொருத்தம். கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் சில  காட்சிகளே வந்தாலும் நிறைவான நடிப்பை தந்திருக்கின்றனர். படத்தில் மோகன்லாலின் நண்பராக வரும் பிரபு, அச்சுதனாக வில்லன் வேடத்தில் வரும் அசோக் செல்வன், மன்னராக வரும் நெடுமுடி வேணு ஆகியோரும் படத்துக்கு துணை நிற்கின்றனர்.

பாகுபலிக்கு பிறகு இன்னொரு பிரமாண்ட சரித்திர படமாக உருவாகியிருக்கும் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தை கொஞ்சமும் பழமை மாறாமல் சரித்திர சம்பவங்களுடன் இயக்கி இருக்கிறார் பிரியதர்ஷன்.  எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு காட்சியின் வீரியம் கெடாமல் கட்டிக்காக்கிறது.

கிராபிக்ஸ், வி எப் எக்ஸ் காட்சிகள் அமைத்திருக்கும் சித்தார்த் பிரியதாஷன், அரங்கத்தை அச்சு அசலாக சரித்திர காலத்துக்குள் கொண்டு சென்றிருக்கும் சாபு சிரில் படத்தின் தூண்களாக தாங்கி நிற்கின்றனர்.  அதேபோல் இசை அமைத்திருக்கும் ரோனி ரபேல், பின்னணி இசை  அமைத்திருக்கும்  ராகுல் ராஜ் , அன்கித் சூரி ,லில் இவான்ஸ் ரோடர் போர்ச் சூழலையும் காதல் சுகங்களையும் காதுக்குள் பாயவிடுகிறது.

இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வி கிரியேஷன் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டிருக்கிறார்.

மரைக்காயர் அரபி க்கடலின் சிங்கம்- பிரியதர்ஷன், மோகன்லால் கூட்டணியின் ஒப்பற்ற படைப்பு.i

 

Leave A Reply

Your email address will not be published.