மரிஜுவானா (பட விமர்சனம்)

17
படம்: மரிஜுவானா 
நடிப்பு: ரிஷி, ஆஷா பாத்தலோம்
இசை: கார்த்திக்கு குரு
ஒளிப்பதிவு: பாலா ரோசைய்யா
இயக்குனர்: எம்டி ஆனந்த்
மரிஜுவானா என்றால் பலருக்கு புரியாது.  போதை ஏற்றும் கஞ்சாவுக்கு இன்னொரு பெயர்தான் மரிஜுவானா. உச்சக்கட்ட போதைக்கு செல்லும் ஒருவன் என்ன  செய்வான் எனதுதான் இப்படத்தின் கதை.
தியேட்டர் ஒன்றில் அமைச்சர் மகனும் இன்னொரவரும்  கொலை செய்யப்படுகிறார்கள்.மர்மக்மக நடந்த கொலையை கண்டுபிடிக்க களம்மிறங்குகிறார் ரிஷி  . எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
ஆனால் அங்கு கஞ்சா இருப்பது  கண்டுபிடிக்கிறார், அதையே துப்பாக எடுத்துக்கொண்டு ரிஷியால் கொலையாளியை கண்டுபிடிக்க முடிகிறதா  என்பதை  விறுவிறுப்பாக கதை சொல்கிறது.
அட்டு  பட நாயகன் ரிஷி ஆறடி உசரம் போலீஸ் வேடத்துக்கு பொருந்தி இருக்கிறார். சைலண்ட்டாக காய்களை நகர்த்துவதும் கொலையாளியை கண்டுபிடிக்க இயல்பாக நடிப்பதும் அருமை. ஆஷா பாத்தலோம் ஹீரொயினாக வருகிறார்.  ரிஷியுடன் சேர்ந்து கொடுத்த வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார். வில்லன்  நடிப்பில் மெருகு.பவர் ஸ்டார் கமெடி செய்து சிரிக்க வைக்கிறார்.
மாறுபட்ட தலைப்புடன் வித்தியாசமான படமாக தரவேண்டும் என்ற இயக்குனர் எம்டி ஆனந்த் முயற்சி பாராட்டுக்குரியது. வில்லனை பிளாஷ்பேக் பேச வைத்துதிருப்பது புது ஐடியா.
கார்த்திக் குரு இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது.
தேவா பாடிய பாடல் காதில் கணீரென ஒலிக்கிறது..
பாலா ரோசைய்யா கேமரா  காட்சிகளில் யாதார்த்தத்தை தவறவிடாமல் பதிவு செய்துள்ளது,
மரிஜுவானா- போதைக்காரர்களுக்கு ஒரு பாடம்.

Leave A Reply

Your email address will not be published.