விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியானது

கொரோனாவை கடந்து ரசிகர்கள் கொண்டாட்டம்

15

விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுந்தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா  ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டது. இதையடுத்து மாஸ்டர் தள்ளிவைக்கப்பட்டது.

ஊரடங்கு தளர்வில் 50 சதவீத அனுமதியுடன்  தியேட்டர்கள் திறக்கப்பட்டன். 100 சதவீத அனுமதி கிடைத்தவுடன் மாஸ்டர் திரையிட முடிவு செய்யப்பட்டது. அதற்கு அரசு அனுமதி கொடுத்த நிலையில் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையில் பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. 100 சதவீத டிக்கெட் அனுமதியை 50 சதவீதமாக அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. பல்வேறு தடங்கல்களை மீறி கொரோனாவையும் கடந்து  திட்டமிட்டபடி இன்று படம் வெளியானது.

நாளை பொங்கல் தினம் முன்னதாக இன்று போகி திருநாளில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சி தொடங்கியது. ரசிகர்கள் உற்சாகமாக ஆரவாரத்துடன் மாஸ்டர் படம் பார்த்து ரசித்தனர். முன்னதாக தியேட்டர் முன்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் மேளதாளம் முழங்கியும் கொண்டாடினர். விஜய் பேனர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.

Leave A Reply

Your email address will not be published.