பொங்கலுக்கு மாஸ்டர் மட்டும் ரிலீசா?

13

தியேட்டர்களில் 50சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விஜய் நடித்த மாஸ்டர், சிம்பு நடித்த ஈஸ்வரன் படங்களை பொங்கலுக்கு திரையிட முடிவானது. இந்நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டு நடிகர் விஜய், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். தியேட்டர் அதிபர்கள் சார்பிலும் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து தமிழக அரசும் தியேட்டர்களில் முழுமையாக பார்வையாளர்களை அனுமதிக்க அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. எனவே முன்பு போல், 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால் வசூல் பாதிக்காத நிலையில், பொங்கலுக்கு மாஸ்டர் படத்தை மட்டும் திரையிடுவது என்றும், மத்த படங்களை ஒத்தி வைப்பது என்றும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறும் பொது, ‘தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த பிறகு பொங்கல் ரிலீஸ் படம் குறித்து அறிவிப்போம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.