மீண்டும் (திரைப்பட விமர்சனம்)

152

படம்: மீண்டும்

நடிப்பு: கதிரவன், அனகா,  சரவணன் சுப்பையா, பிரணவ் ராயன். அனுராதா, துரை சுதாகர், அபிதா ஷெட்டி,  யார் கண்ணன், தர்ஷிமி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, இந்துமதி மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்னி, மோனிஷா

இசை: நரேன் பாலகுமார்

ஒளிப்பதி:ஸ்ரீனிவாஸ் தேவாம்ஸம்

தயாரிப்பு: ஹீரோ சினிமாஸ் சி.மணிகண்டன்

இயக்கம்: சரவணன் சுப்பையா

பி. ஆர். ஓ: டைமண்ட் பாபு

மார்கெட்டிங்: பி.டி.செல்வகுமார்

வருமான வரித் துறையில் ரகசிய புலானாய்வு பிரிவில் அதிகாரியாக இருக்கிறார் கதிரவன். உலக அளவில்13 பெரிய பணக்காரர்கள் கூட்டு சதியில் ஈடுபட்டு நாட்டில் இயற்கை சீற்றங்களை செயற்கையாக உருவாக்கி பேரழிவை ஏற்படுத்தி அதன் மூலம் உலக நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில்கொண்டு வர முயல்கின்றனர். அதற்கு இந்தியாவில் சில முக்கிய புள்ளிகள் உடந்தையாக இருக்கின்றனர். அவர்களில் ஒரு முக்கிய புள்ளியான துரை சுதாகர் மீது சந்தேகம் அடைந்து அவரை கைது செய்து விசாரிக்கும் பொறுப்பு கதிரவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. தனிப் படை அமைத்து  துரையை சுற்றி வளைத்து கைது செய்து விசாரிக்கிறார். எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்காமல் அவர் நழுவுகிறார். சிலாகி என்ற தீவில்தான் சதித் திட்டம் தீட்டப்படுகிறது என்ற  ரகசியத்தை கண்டறியும் கதிரவன் அந்த தீவிற்கு தனி ஆளாக சென்று ரகசிய திட்டத்தை கண்டறிய முடிவு செய்கிறார்.  இதற்கிடையில் கதிரவனின் குடும்ப கதையும் ஒரு பக்கம் அவரை திணறடிக்கிறது. பிரிந்து சென்று வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்ட தன் மனைவியிடம் தான் வளர்த்த பிள்ளையை பற்றி உண்மையை சொல்லாமல் இருக்கிறார். அந்த பிள்ளை தனக்கு பிறந்த மகன் என்பதை அறிந்து மாஜி மனைவி தாய்மையில் துடிக்கிறாள். தன்னிடம் பிள்ளையை தரும்படி கேட்கிறார். இதற்கு கதிரவன்  எடுத்த முடிவு என்ன? சிலாகி தீவின் மர்மம் என்ன என்பதை கதிரவன் கண்டுபிடித்தாரா என்ற பல கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

ஆக்‌ஷன், குடும்ப செண்டிமெண்ட் என இருவித கதைகளையும் ஒன்றாக கலந்து சொல்வதென்பது மிகவும் கடினம் அதை சரிவிகிதத்தில் கலந்து அனைவரும் உணர்வுபூர்வமாக ரசிக்கும் படமாக இயக்குனர் சரவணன் சுப்பையா, ஹீரோ கதிரவன் தந்திருக்கின்றனர்.

ஹீரோ கதிரவன் கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போய் இருக்கிறார். தந்தையாக ஒரு பக்கம் பிள்ளை மீது பாசம் பொழிவதாகட்டும், நாட்டை சீரழிக்க திட்டமிடும் தேசதுரோகிகளை ஒழிக்க ஆவேசப்படுவதாகட்டும் அற்புதமான நடிப்பால்  மிரள வைக்கிறார்.

ஆக்‌ஷன் காட்சிகளில் எந்த ஹீரோவும் செய்யத் துணியாத காட்சியில் கதிரவன் நடித்திருக்கிறார். சிலாகி தீவில் நடக்கும் தீவிரவாதிகளின் ரகசிய கூட்டத்தை அறிவதற்காக தனிஆளாக  செல்லும் கதிரவன் அங்குள்ளவர்களிடம் சிக்கிக்கொண்டு கொடுமையான சித்ரவதை அனுபவிப்பது ரசிகர்களை மூச்சு திணறவைக்கிறது.  தலைகீழாக தொங்கவிட்டு நீரில் மூழ்கடிப்பது, நிர்வாணப்படுத்தி தடியால் அடித்து கொடுமைபடுத்தப்படும் காட்சிகளில் கதிரவன் செய்திருக்கும் அர்ப்பணிப்பு கண்களை குளமாக்குகிறது. டூப் எதுவும் போடாமல் கதிரவன் நடித்த இந்த காட்சியில் அவர் உயிரை பணயம் வைத்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு நடித்திருப்பது  அப்ளாஸ் பெறும்.

தன் மகன் மீது பாசம் கொட்டி வளர்க்கும் கதிரவன் அவனுக்கு தலையில் காயம்பட்டதும் பதறி துடித்து மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடும்போது மகன் மீது அவர் கொண்டிருக்கும் பாசத்தின் வெளிப்பாடாக பிரதிபலிக்கிறது.

தன்னைவிட்டு பிரிக்கப்பட்ட  மனைவி அனகா  சரவணன் சுப்பையாவை மறுமணம் செய்துகொண்டார் என்பதை அறிந்தும் அதுபற்றி அதிர்ச்சி வெளிப்படுத்தாமல் தன் மகன் மட்டும்போதும் என்று கதிரவன் எண்ணுவதும், கதிரவன் வளர்க்கும் பிள்ளை தன் வயிற்றில் பிறந்த பிள்ளை என்று தெரிந்து தாய் பாசத்தில் அனகா உருகுவதுமாக செல்லும் காட்சிகள் இது எந்த பிரச்னையை உருவாக்குமோ என்ற கேள்வியை எழச் செய்கிறது, அனகாவை திருமணம் செய்துகொண்ட சரவணன் சுப்பையா மனைவியின் சந்தோஷத்துக்காக அவருக்கு துணையாக நின்று தோள் கொடுக்கும்போது பண்பட்ட கணவராக மனதில் இடம் பிடிக்கிறார்.

பெற்ற பிள்ளை தன்னை ஆண்ட்டி என்று அழைப்பதை கண்டு துடிக்கும் அனகா  ஒரு கட்டத்தில், ”நீ எனக்கு வேண்டாம் வெளியே போ..” என்று பிள்ளை துரத்தும்போது மனம் உடைந்து அழுவதுமாக உருக்கமான நடிப்பால் மனதை நெகிழ வைக்கிறார்.

சிலாகி தீவில் கதிரவன் சிக்கி கொண்டத்தும் அவரை சித்ரவதை செய்யும் லேடி ஹிட்லராக வரும் நடிகை பார்வையாலும்  தெனாவட்டாக பேசியும் சரியான வில்லியாக மாறி முறுத்துகிறார்..

சி.மணிகண்டன் தயாரித்திருக்கிறார்

அஜீத் நடித்த சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணன் சுப்பையா நீண்ட வருடங்களுக்கு இப்படத்தை இயக்கி இருக்கிறார். சுனாமி செயற்கையாக உருவாக்கப்பட்டதாக கதையில் அவர் சொல்வது பெரும் அதிர்ச்சி. ஒருவேளை இப்படி நடந்திருக்காலாமோ என்று சந்தேகம் எழும் அளவுக்கு காட்சி அமைத்திருப்பதும் பரபரப்பு.

சிட்டிசன் படத்தில் ஒரு ஊரே காணாமல் போனதாக சொல்லி அப்படத்தை பேச வைத்த சரவண சுப்பையா இப்படத்தில் சுனாமி பேரழி பற்றிய சந்தேகத்தை கிளப்பி அதிர வைத்திருக்கிறார்.

ஸ்ரீனிவாஸ் தேவம்சம் ஒளிப்பதிவு இரண்டு விதமாக கையாளப்பட்டிருப்பதால் குடும்பபாங்கான காட்சிகள் அழுத்தமாகவும், ஆக்‌ஷன் காட்சிகள் அச்சம் தரும் வகையிலும் படமாக்கி பேச வைத்திருக்கிறார்.

நரேன் பாலகுமார் இசையில் பாடல்கள்  ரசிக்க வைக்கிறது குறிப்பாக வயிறோடு வந்த மகனா பாடல் மனதிலும்  உதட்டிலும் ஒட்டிக்கொள்கிறது வைக்கிறது.

மீண்டும் – அனைத்து தரப்புக்குமான ஆக்‌ஷன், குடும்ப சென்ட்டிமென்ட் படம்

Leave A Reply

Your email address will not be published.