தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் நினைவு நாள் இன்று நவம்பர் 1

ஹரிதாஸ் படம் மூலம் 3 தீபாவளி கண்ட ஒரே நடிகர்

15

 

தமிழ் திரையுலகின் முதல் சூப்ப்பர் ஸ்டார் எம். கே. தியாகராஜ பாகவதர். மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் என்பதை சுருக்கமாக எம். கே. டி என அழைக்கப்பட்டார். மார்ச் 1ம்தேதி 1910ம் அண்டு பிறந்தார். – நவம்பர் 1, 1959 காலமானார். இன்று நவம்பர் 1ம் தேதி. பாகவதரின் நினைவு நாள்.


தமிழ் திரையுலகி தியாகராஜா பாகவதர் காலம் என்பது மயக்கும் மதுரமான பாடல்களின் காலமாக திகழ்ந்தது. அவரே நடிப்பார், அவரே பாடுவார். பெண்கள் மட்டுமல்ல ஆண்களே அவரை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட மாட்டோமா என்று அந்த காலத்தில் ஏங்கினர். தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே,தியகராஜ பாகவதர். இவர் கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார்.


1934 ஆம் ஆண்டு பவளக் கொடி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும்.
1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.
இன்றைய சென்னை அன்றைக்கு மெட்ராஸ் அதாவது மதராஸ் ஆக பெயர் பெற்றிருந்தது. மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்றத் தோழரான என். எஸ். கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றனர்.


தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்துவந்தார். நவம்பர் 1, 1959 இல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார்
தமிழ் திரையுலக கதாநாயகான அன்றைக்கு கொடி கட்டி பறந்தார். அவரைபோல் வாழ்ந்தவரும் இல்லை அவரைப்போல் வீழ்ந்தவரும் இல்லை என்று அவரைப்பற்றி நன்கு தெரிந்தவர்கள் இன்றைக்கும் சொல்வார்கள்.
எம்.கே.டி யின் பாடல்கள் பெரும் பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு ஆஸ்தான பாடலாசிரியர் பாபநாசம் சிவன். இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராவார். இவரின் பல பாடல்கள் எம்.கே.டி யின் புகழை உயர்த்தின, மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன. அவற்றில் சில,
உன்னை அல்லால்,
நீலகண்டா,
அம்பா(ள்) மனம் கனிந்துருகியுனது கடைக் கண் பா(ர்),
சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே(ன்) சுவாமி சுப்ரமணிய(ன்)உனை மறந்தேன்,
ஞானக்கண் இருந்திடும் போதினிலே,
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்,
மன்மத லீலையை வென்றார் உண்டோ,
தீன கருணாகரனே நடராஜா
ராஜன் மஹராஜன்
வதனமே சந்திரபிம்பமோ
போன்ற பல பாடல்கள் இவரின் புகழுக்கு சான்றாக உள்ளன. அவர் பாடல்களில் 41/2 கட்டை (குரல் தடிமன்) சுருதியில் (சுதி) பாடக்கூடியவர். குரலில் பெண்களின் நளினத்தன்மை மிகுந்திருக்கும் பல நேரங்களில் பெண் பாடுவது போல் தோன்றுவதுண்டு. சுருதியின் உச்சநிலையிலையிருந்து உடனே கீழே இறங்கிப்பாடும் வல்லமை பெற்றவர். வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பாடுவதில் வல்லவர். இறுதியில் வல்லினமெய் தெரியாமல் பாடக்கூடியவர்.
தியாகராஜா பாகவதர் படங்களில் வசனம் குறைவாக இருக்கும் சில நிமிடங்களுக்கு ஒருமுறை பாடல்கள் வரும். பின்னர் அந்த பாணியிலான படங்களை கலைஞர் வசனம் எழுதி நடிகர் திலகம் சிவாஜி நடித்த பராசக்தி படம் திரைக்கு வந்த பிறகு மாறி வசனங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வரத் தொடங்கின.
எம்.கே. தியாகராஜா பாகவதர் தமிழ் திரையுலக்கு கிடைத்த பொக்கிஷம் என்பதில் சந்தேகமில்லை. அவரது நினைவுநாளில் வணக்கத்தை செலுத்துவோம்.

Leave A Reply

Your email address will not be published.