உதயமானது மக்கள் நீதி மய்யத்தின் தலைமை தொழிற் சங்கம்

7

 

மக்கள் நீதி மய்யம தொழிலாளர் நல அணி சார்பில் முப்பெரும் விழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர்  சு.ஆ.பொன்னுசாமி தலைமையில் இன்று (15.07.2021) காலை 11.00மணியளவில் நடைபெற்றது.

நிர்வாக குழு உறுப்பினர்  ஸ்ரீப்ரியா மற்றும்  பானுமதி,  ஸ்ரீரித்திகா, ஜெயந்தி,  தனலட்சுமி ஆகியோர் குத்துவிளக் கேற்ற, துணைத் தலைவர்கள்  ஏ.ஜி.மெளரியா,  ஆர்.தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்த இவ்விழாவில் தலைவர் நம்மவர்  கமல்ஹாசன் கலந்து கொண்டு கட்சியின் தலைமை தொழிற்சங்கமான நம்மவர் தொழிற்சங்க பேரவையை துவக்கி வைத்து, தொழிற்சங்க லோகோ, கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து *கர்ம வீரர் காமராஜர் 119வது பிறந்த நாளை முன்னிட்டு 119நலிவடைந்த தொழி லாளர்கள் குடும்பங் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வாக ஐந்து குடும்பத்தினருக்கு தொழிற்சங்க பேரவை துவக்க விழா மேடையில் உதவிப் பொருள்களை வழங்கினார்.* அந்த *ஐவரில் ஒரு தொழிலாளர் மாற்றுத்திறனாளி என்பதை அறிந்த உடன் நம்மவர்,  நலத்திட்ட உதவி பொருட்களோடு மேடையில் இருந்து கீழே இறங்கி அவர் இருந்த இடத்திற்கே சென்று உதவி பொருட்களை வழங்கி னார்.

அதனை தொடர்ந்து நம்மவர் அவர்கள் தொழிற் சங்க பேரவை தலைவராக சு.ஆ.பொன்னுசாமி அவர்களையும், பொதுச் செயலாளராக  வி.ரவிச் சந்திரன், பொருளாளர்  டி.சேகர், துணைத் தலைவர்களாக  மா.பானுமதி,  எம்..ராஜன், கே.மாடசாமி,  கோ.ரவிச்சந்திரன்,  மெல்கியோ,  ரா.பத்ம நாபன்,  சொக்கர், துணைச் செயலாளர்களாக  பெ.குணசேகரன்,  ஸ்ரீரித்திகா, எம்.புகழ் முருகன்,  எஸ்.ஜெயந்தி, எஸ்.சுரேஷ்,  வி.மோசஸ், திருமலைராஜன், செயற்குழு உறுப்பினர் களாக  கே.சீனிவாசன், ராஜூ,  கே.லட்சுமி,  ம.பாலாஜி உள்ளிட்டோரை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நம்மவரின் அரசியல் ஆலோசகர்கள் பழ. கருப்பையா,  வெ.பொன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணைத் தலைவர்  ஏ.ஜி.மெளரியா, ஆர்.தங்கவேலு, மாநில செயலாளர்கள் சிவ இளங்கோ, செந்தில் ஆறுமுகம்,  சரத்பாபு ஏழுமலை ஆகியோர் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். விழா விற்கு வந்தவர்களை  டி.சேகர் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்த, ரவிச்சந்திரன் நன்றியுரை நிகழ்த்த, நாட்டுப்பண் இசைத்தலோடு விழா இனிதே நிறைவுற்றது.

அதன் பிறகு நம்மவர் தொழிற்சங்க பேரவையின் முதல் நிர்வாக குழுவிற்கு தேர்வு செய்யப்பட்ட மாநில நிர்வாகிகள் தலைவர் நம்மவர் கமல்ஹாசனை குழுவாக சந்தித்து நன்றி தெரிவித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

சு.ஆ.பொன்னுசாமி*
(மாநில தலைவர்)
நம்மவர் தொழிற்சங்க பேரவை (மாநில செயலாளர்) மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் நல அணி.

 

Leave A Reply

Your email address will not be published.