மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு கோவிட்.19 பாசிடிவ் இருப்பதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள மெசேஜ்:
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2021
கமல்ஹாசன் விரைந்து குணம் அடைய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு. க.. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் அறிக்கை கமல்ஹாசன் உடல்நலம் குறித்து கூறும்போது,’ கமல்ஹாசனுமக்கு மூச்சு விடுவதில் சிரமம், இருமல், லேசான காய்ச்சல் உள்ளது. பரிசோதனையில் கோவிட் பாசிட்டிவ் என்பது தெரியவந்தது. அவர் மற்றபடி நலமுடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.