பத்மஸ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகிக்கு மநீமதலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
பத்மபூஷண் விருது பெறும் தமிழரான டாடா குழுமத்தின் சேர்மன் நடராஜன் சந்திரசேகரன், தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் கூகிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கும், பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் தமிழர்களான கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், ஷெனாய் இசைக்கலைஞர் பண்டிட் எஸ். பாலேஷ், சமூக சேவகர் எஸ். தாமோதரன், பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, சதிர் நடனக்கலைஞர் விராலிமலை ரா. முத்துக்கண்ணம்மாள், கிளாரினெட் இசைக்கலைஞர் ஏ.கே.சி. நடராஜன், மருத்துவர் வீராசாமி சேஷய்யா, புதுச்சேரி தவில் இசைக்கலைஞர் ஏ.வி.முருகைய்யன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது.
– தலைவர் கமல் ஹாசன்