சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மோடி, மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

ரசிகர்கள் இனிப்பு வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டம்

1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி அவரது ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தனர். நல திட்ட உத்விகளும், இனிப்பும் வ்ழங்கினார்கள். ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

”ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் தனது படைப்பாற்றல் மற்றும் அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் ரஜினிகாந்த் வாழ கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்து செய்தியில், ”உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வழ்த்துக்கள். 72வது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர் இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களை தன்னிகரற்ற திறமையாளுமையால் மகிழ்விக்கவும் நல்ல உடல் நலத்துடன் திகழவும் விழைகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ள வாழ்த்தில்:

மேலும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.