மூக்குத்தி அம்மன் (விமர்சனம்)

22

படம் மூக்குத்தி அம்மன்
நடிப்பு; நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி. ஊர்வசி, மவுலி.
தயாரிப்பு: வேல்ஸ் இண்டர் நேஷனல் ஐசரி கணேஷ்
இசை: கிரிஷ்
இயக்குனர்: ஆர்.ஜே.பாலாஜி, என் ஜே சரவணன்
ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன்
ரிலீஸ்: டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்.

தீபாவளிக்கு வந்தருக்கு ம் அர்த்தமுள்ள அம்மன் படம் மூக்குத்தி அம்மன். நாகர்கோ விலில் லோக்கல் டிவி நிருபராக ஆர்.ஜே. பாலாஜி தனது , தாத்தா, அம்மா ஊர்வசி மற்றும் 3 தங்கைகளுடன் வாழ்ந்து வருகிறார். போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தில் கஷ்டம். ஊர்வசி திருப்பதி கோவிலுக்கு செல்ல பல ஆண்டுகளாக முயற்சி செய்கிறார். முடியவில்லை. குல தெய்வம் கோவிலுக்கு சென்றால் கஷ்டங்கள் தீரும் என்று சொல்வதை கேட்டு குடும்பத்துடன் புறப்படு கிறார். அங்கு அவர்கள் கனவில் வருகிறார் மூக்குத்தி அம்மன் (நயன்தாரா). நிஜத்தில் பிரசன்னம் ஆகும் அம்மன் நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி யுடன் பயணித்தை தொடங்கு கிறார். சாமியார் ஒருவர் ஆன்மிகம் என்ற பெயரில் 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க அதை நயன்தாரா அம்மன் வடிவில் வந்து தட்டி கேட்கிறார். அதன்பிறகு நடப்பது என்ன? பாலாஜி குடும்ப கஷ்டம் தீர்ந்ததா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.


நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு அம்மன் படம். வெறும் அம்மன் புகழ் மட்டும் பாடாமல் அம்மனே போலி சாமியார்களின் முகத்திரையை கிழிப்பதுதான் படத்தின் ஹைலைட். அம்மன் வேடத் துக்கு அம்சமாக பொருந்தி இருக்கிறார் நயன்தாரா.
யாராவது பொது வெளியில் இதுபோன்ற கேள்விகளை கேட்டல் நாக்கை அறுப்பேன் என்று அந்த கட்சிக்காரர்கள் ஆவேசம் அடைவார்கள். அந்த கேள்விகளையெல்லாம் சர்வ சாதாரணமாக் கேட்டு அசத்தி விடுகிறார் நயன்தாரா.
ஆர்.ஜே.பாலாஜி கிண்டல் செய்வதில் பெயர் பெற்றவர் என்றுதான் தெரியும் இதில் நடிப்பில் பெயரெடுக்கிறார். நான் தான் அம்மன் என்று நயந்தாரா சொன்னதும் அவருக்கு டெஸ்ட் வைப்பது போன்ற நகைச்சுவை காட்சிகள் சுவாராஸ்யமான வை. ஆர்.ஜே. பாலஜியின் அம்மா வேடம் ஏற்றிருக்கும் ஊர்வசி நடிப்பில் முத்திரை பதிக்கிறார். தாத்தா மௌலி, தங்கை ஸ்மிருதி வெங்கட் காட்சிகளுக்கு தேவையான இடத்தில் பொருந்தி இருக் கின்றனர்.
இடத்தை வளைத்துப்போட்டு ஆன்மிக ஆசிரமம் நடத்தும் அஜய் கோஷ் சாமியாராக வந்தாலும் வில்லன் முத்திரை முகத்தில் தெரிகிறது
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவ ணனுடன் இணைந்து அச்சப் படாமல் படத்தை இயக்கி இருக்கிறார்கள். கிரிஷ் இசை யில் எல் ஆர். ஈஸ்வரியின் பாடல் அம்மன் ஏற்கனவே வெளியாகி பக்கி ரபரவசம் ஏற்படுத்தியது.

‘மூக்குத்தி அம்மன்’ போலி பக்திமான்களுக்கு சவுக்கடி.

Leave A Reply

Your email address will not be published.