பொங்கலுக்கு வெளியாகும் படங்கள்

17

தீபாவளிக்கு பிஸ்கோத்து, இரண்டாம் குத்து, மரிஜுவானா உள்ளிட்ட சில படங்கள் வெளியாகின. எந்த படமும் பெரிய அளவில் வரவேற்பை பெறவும் இல்லை. வசூலையும் குவிக்கவில்லை.

இந்தப் படங்கள் வெளியான தியேட்டர்கள் ஓரிரு நாட்களிலேயே வெறிச்சோடி விட்டன. ஒரு ஷோவுக்கு முப்பது அல்லது நாற்பது பேர் மட்டுமே வருகின்றனர். 20 பேருக்கு குறைவாக வந்தால் காட்சி ரத்து செய்யப்படுகிறது.

எந்த தியேட்டரிலும் இரவுகாட்சி தொடங்கப்படவில்லை. இந்த நிலவரத்தால், கடந்த வாரம் புதிய படங்களும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், சசிகுமார் நடித்த எம்ஜிஆர் மகன் படம் கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

பொங்கலுக்கு மாஸ்டர் (விஜய்) ஜகமே தந்திரம் (தனுஷ்) ஈஸ்வரன் (சிம்பு) சுல்தான் (கார்த்தி) காடன் (ராணா) ஆகிய 5 படங்கள் வெளியாகின்றன.

இப்போது கடும் நஷ்டத்தில் தவிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள், ‘டிசம்பரில் கொரோனா பிரச்சனை ஓய்ந்துவிடும், பொங்கலுக்கு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போது தியேட்டர்களில் கூட்டம் வரத் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.