எம் ஆர் ராதா காலமான நாள் 

0

 

திரைப்பட நடிகர்கள் எழுத்தாளர்களாக இருப்பது அபூர்வமான விஷயம். எம்.ஆர்.ராதா வெறும் நடிகராக மட்டுமில்லாமல் மிகச் சிறந்த கார் ஓட்டுனர், மெக்கானிக், எலெக்ட்ரீஷியனாக இருந்தார். அந்தக் காலத்தில் எந்த புதிய கார் மார்க்கெட்டுக்கு வந்தாலும் மறுநாள் அந்த கார் அவர் வீட்டு போர்டிகோவில் நிற்கும் அந்த அளவிற்கு கார் விரும்பியாக அவர் இருந்தார்.

சினிமாவில், சீர்திருத் தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டினால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா… எவருக்கும் அஞ்சாத ராஜா!

மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கம்… எம்.ஆர்.ராதா. ஜெர்மன் போர்க்கப்பலான ‘எம்டன்’ சென்னையில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்பதால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடிச் சம்பவங்கள் நிறைய

ஆரம்ப பேராவில் சொன்னது போல் அவர் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார். அவர் நாடகங் கள் நிறைய எழுதியிருக் கிறார். நிறைய புத்தகங் களும் எழுதியிருக்கிறார். எல்லாமே அரசியல் புத்தகங்கள்தான் “அண்ணாவின் அவசரம், “அண்ணாதுரையும் முன்னேற்ற நிலையும், “ஆறவுன்ஸ் ஆட்சியிலே, “தடை செய் இராமாயணத்தை, “இராமாயணமா கீமாயணமா, “இராமாயண சிறப்பு மலர் ஆகியவை அவற்றில் முக்கிய மானவை.

சின்னவயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளியில் படிக்க மனம் இல்லை. ‘நான் ஓர் அநாதை’ என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந் தார். நல்லத்தங்காள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தை களில் ஒன்றாக மேடை யேறியது முதல் அனுபவம் ‘நாடகத்தில் நடிக்கச் சொல்லிக் கொடுத்தது ஜெகநாதய்யர்தான்’ என்பார்!

ராதா நடித்த முதல் படம் ‘ராஜசேகரன்’ (1937), கடைசிப் படம் ‘பஞ்சா மிர்தம்’ (1979),சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா – நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்!

‘உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்’ என்று சொல்லி, அரிவாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டுவதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திராவிடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டிவிட்டுத் தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!

ரத்தக் கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட்சுமிகாந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன!

ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப் பல கார்களை வைத்திருந்தார். இம்பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக் கோல் எடுத்துச் சென்ற தைப் பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். ‘நமக்குப் பயன் படுறதுக் குத்தானப்பா கார். தகரத் துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலை யிலயா தூக்கிட்டுப் போக முடியும்?’ என்று கேட்டார்!

நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போது செருப்பு, கல், அழுகிய முட்டை போன்றவை எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பார். ‘நேற்று பேடிகள் விட்டுச்சென்ற சாமான்கள்’ என்று அதில் எழுதிவைப் பார்!

எம்.ஜி.ஆரை ‘ராமச்சந்திரா’ என்றும், சிவாஜியை ‘கணேசா’ என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!

இவரது நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் விவாதத்துக்கு வந்தபோது டவுசர், பணியனோடு சபை வளாகத்துக்குப் போய் விட்டார். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதையே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்!

என்.எஸ். கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர் பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, ‘நண்பன் கையால் சாகக் கொடுத்து வைத்திருக் கணும்’ என்று என்.எஸ்.கே சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா. திருப்பதி கோயிலுக்கு குண்டுவைக்கப் போய் வெடி மருந்தைக் காய வைத்து, அது வெடித்துச் சிறு விபத்தான சம்பவமும் உண்டு!

எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக் கொண்டதாகப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. ‘நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக் கியை வெச்சு விளையா டிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக் கிறானுங்க. நானும் சாகலை… ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது?’ என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!

நான்கரை ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார் அவர் மீது ஆர்வம்கொண்ட வராகக் காட்டிக்கொண்ட கைதி ஒருவர், ஒரு நாள் சமையல் செய்து கொடுத் தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பிட்டதும் சுருண்டு விழுந்து செத்துப்போனது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம் கலக்கப்பட்டு இருந்தது பின்னால் தெரிய வந்தது!

Leave A Reply

Your email address will not be published.