ஜி.என். வேலுமணி சுறுசுறுப்பு பற்றி முக்தா சீனிவாசன்

15

GN வேலுமணி

சொர்க்க வாசல்

நான் Jupiterஇல் Asst Director ஆக வேலை செய்த பொழுது தயாரிக்கபட்ட படம்
தயாரிப்பு மேற்பாவை
ஜீபிட்டர் மாப்பிள்ளை

அவர் கீழ் G N வேலுமணி
தயாரிப்பு நிர்வாகம் பொறுப்பு

“சொர்க்க வாசல்” படத்துக்கு ஏற்பட்ட, சென்சார் பிரச்சனையும், சொன்ன நேரத்தில் ரிலிஸ் ஆக தயாரிப்பு நிர்வாகி யாக இருந்த பிரபல தயாரிப்பாளர் GN வேலுமணி செய்த அசுர வேக செயல் திட்டங்கள் பற்றி இங்கு நான் பதிவிட விரும்புகிறேன்

;
அறிஞர் அண்ணாதுரை எழுதிய கதை. அவர் மேல் அலாதி பிரியம் கொண்ட நடிகர் KR ராமசாமி கதாநாயகனாக நடித்த படம்
SS R அஞசலிதேவி சச்சு (சிறுமி) ஆகியோரும் நடித்தார்கள் . A காசிலிங்கம் இயக்கினர்

அதில் சொல்லபட்ட மாற்று கருத்துகள் வசனங்கள் சென்சார் அனுமதிக்கவில்லை . நிறைய காட்சிகள் நீக்கும் படி ஆனையிட்டது. இதில்இரண்டு பாடல்களும் அடங்கும்
ஜீபிட்டர் சோமு முதலாளி ,அப்படியே பேதலித்து விட்டார்

விஷயத்தை அறிந்த வேலுமணி தன் அசுர செயலால் திட்டம் தீட்டி சொன்ன நேரத்தில் ரிலீஸ் செய்ய பாடுபட்டார்

ஒரே நேரத்தில்

ஒரு பக்கம்

MSV ராமமூரத்தி ரிக்கார்டிங்
முழு பாட்டையும் orchestra வோடு எடுக்க வேண்டும் அந்த கால கட்டத்தில் Optical method அப்பவெல்லாம் tape method வரவில்லை . முழு பாட்டை record செய்ய வேண்டும். உடுமலை நாரயணகவி யிடம் சில வார்த்தை களை மாற்றி எடுக்கவேண்டும். அவருக்கு உதவி இயக்குனர் KSG

இன்னொறு பக்கம் எடிட்டிங்

MA திருமுகம் எடிட்டர் உதவி விஜயரங்கம் அண்ணாதுரை அவர்கள் காசிலிங்கம் அவரகள் இரவு பகல் பாராமல்
எந்தெந்த shots எடுக்க வேண்டியவை ;
அதற்குரிய வசனங்கள் மாற்றி எழுதும் வேலை அதற்குரிய Shooting எடுக்கும் வேலை

மூன்றாவதாக

மாற்று சீன்களுககு shooting எடுக்க set,போடும் வேலை நடந்து கொண்டிருந்தது.
ஜெயில் set..
அஞ்சலி தேவி மற்றும் நடிகர்களிடம் ” யாரும உணர்சசி வசப்பட்டு ஜெயில் கம்பி யை தொடவேண்டாம் இன்னும் Paint காயலை” என்று வேலுமணியின கட்டளை யாக இருந்தது;

நான்காவதாக

lab printing work மீண்டும் எடிட்டிங் sync work.
நான் சேதுமாதவன் நிறைய Asst அந்த வேலை இந்த வேலை என்று ஓடி கொண்டிருப்போம். அந்த சமயத்தீல் யாரை பார்த்தாலும் ஓடிகொண்டிருப்பார்கள் அல்லது வேகமாக நடந்து கொண்டாருப்பார்கள்;

Cut list changed list படம் முழுவதும மீண்டும் சொன்ன தேதியில் censoருக்கு காண்பிக்க அசுர வேலை நடந்து கொண்டிருந்தது

GN வேலு மணி என்ற ஒருவரால் மட்டும் தான் முடிந்தது
அந்தளவுக்கு Planning… வேலை வாங்கும் திறமை பிரமிக்க வைக்குமளவு இருந்தது

GN வேலுமணி பின்னாளில்” பாலுபழமும் பாகபிரிவினை படகோட்டி சந்திரோதயம் குடியிருந்த கோயில் “..என்று பல வெற்றி படங்களை தயரித்து பெரும் புகழ் பெற்றார்

முக்தா சீனிவாசன்

Leave A Reply

Your email address will not be published.