படம் : முருங்கைக்காய் சிப்ஸ்
நடிப்பு: சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி, கே.பாக்யராஜ், ஊர்வசி, மதுமிதா, யோகிபாபு, , வி. சி, ரவீந்திரன், மனோபாலா, முனிஸ்காந்த், மயில்சாமி.
இசை: தரண்குமார்
ஒளிப்பதிவு: ரமேஷ் சக்ரவர்த்தி
தயாரிப்பு: லிப்ரா புரடக்ஷன் வி.சி.ரவீந்திரன்
இயக்கம்:ஸ்ரீஜர்
ரூபாய் 300 கோடி சொத்துக்களை பல தலைமுறைகளாக கட்டிக்காத்துவரும் குடும்பத்தில் பிறந்தவர் சாந்தனு. பத்தாவது தலைமுறை வாரிசான அவருக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அதுல்யாவை மணக்கிறார். ஆனால் முதலிரவில் அவர் மீது சுண்டுவிரல்கூட படக்கூடாது அப்படிபட்டால் சொத்து முழுவதும் அனாதை ஆசிரமத்துக்கு சென்றுவிடும் என்று சாந்தனுவை எச்சரிக்கிறார் அவரது தாத்தா. பெண் களிடம் சபலப்படாமலிருந்ததால் தான் இவ்வளவு சொத்தும் பத்து தலை முறையாக காக்கக்கப்பட்டு வருகிறது. அதனால் சபலத்தை கட்டுபடுத்த வேண்டும் என்பதற்குதான் இந்த கண்டிஷன். ஒருநாள் மட்டும் இந்த கண்டிஷனை கடைபிடித்தால்போதும் மறுநாள் சொத்து சாந்தனுவுக்கு வந்து விடும் என்பது நிலைமை. முதலிரவு அறைக்கு அசத்தாலக நுழையும் அதுல்யாவை பார்த்தும் அவரால் கட்டுப்பாடாக இருக்க முடிந்ததா என்பதை படம் கலகலப்பாக விளக்குகிறது.
சாந்தனுவுக்கு அவரது தந்தை பாக்யராஜ் பாணியிலான கதை அமையவில்லை என்ற குறை இந்த படத்தில் நீங்கி இருக்கிறது. இதுவொரு அக்மார்க் பாக்யராஜ் பாணி கதை. ஆனால் கையாண்டவிதம் பாக்யராஜ் அளவுக்கு கையாண்டிருக்கிறார்களா என்றால் பாதிகிணறு தாண்டி இருக்கிறார்கள் எனலாம்.
சாந்தனுவும் அதுல்யா ரவியும் முதலிரவு அறையில் கபடி விளையாண்டும், வெட்டிக் கதை பேசியும் அல்வாவையும், மல்லிகைப் பூவையும் வாடவிட்டிருக் கிறார்கள். எப்படியாவது சாந்தனுவை முதலிரவு சாங்கியத்தை செய்ய வைக்க வேண்டும் என்று திட்டமிடும் அதுல்யா அதற்காக மறைமுகமாகவும், நேரடியா கவும் டவுள் மீனிங் வசனங்கள் பேசி பார்த்தும் சாந்தனு அசைந்து கொடுக்காதது குபீர் காட்சிகள்.
ஒரேநாள் இரவில் நடக்கும் கதை என்ப தால் ஆக்ஷன் காட்சிகளுக்கு வேலை இல்லை. ஆனாலும் காமெடி காட்சி களுக்கு பஞ்சம் வைக்காமல் மயில்சாமி, யோகிபாபு, மனோபாலா, அடடே மனோகர். முனிஸ்காந்த், மதுமிதா என ஒரு காமெடி பட்டாளத்தையே இழுத்து கும்மாளம் போட வைத்திருக்கிறார் இயக்குனர்.
மடத்துச் சாமியாராகவும், சுடுகாட்டு சாமியாராகவும் இருகெட்டப்பில் வந்து காமெடி கலாட்டா நடத்தி இருக்கிறார் மயில்சாமி. இவர்களுடன் தயாரிப்பாளர் வி.சி.ரவீந்திரனும் கைகோர்த்து காமெடி செய்து தன்னாலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். அடுத்த டுத்து படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவியும்.
சாந்தனுவின் தாத்தாவாக பாக்யராஜ் நடித்து கதையை தொடங்கி வைப்பது போலவே நிறைவும் செய்துவைக்கிறார்.
ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்திருக் கிறார். காட்சிகளில் குறைவைக்காமல் பளீரென லைட்டிங் செய்து டாலடிக்க வைத்திருக்கிறார்.
தரண்குமார் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது.
முருங்கைக்காய் சிப்ஸ்- பொழுது போக்குடன் கூடிய காமெடி படம்.