பாலிவுட் இசை அமைப்பாளர் பப்பி லஹரி காலாமானார்

1

பாலிவுட் பிரபல இசை அமைப்பாளர் பப்பி லஹரி வயது (69). இவர் டிஸ்கோ டான்சர், ஹிம்மத்வாலா, ஷராபி, அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டார்ஜான், டான்ஸ் டான்ஸ், சத்யமேவ் ஜெயதே, கமாண்டோ, ஆஜ் கே ஷஹேன்ஷா, தானேதார், நம்பி ஆத்மி, ஷோலா அவுர் ஷப்னம் போன்ற திரைப்படங்களுக்கு பப்பி லஹரி இசையமைத்துள்ளார்.

மேலும் தமிழில் பாடும் வானம் பாடி, அபூர்வ சகோதரர்கள் ஆகிய படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட இவர் மீண்டும் உலடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  அவருக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்புகள்  இருந்தன. நள்ளிரவுக்கு சற்று முன்பு மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் தீபக் நம்ஜோஷி கூறியுள்ளார்.

மும்பை ஜூஹூவில் உள்ள க்ரிட்டிகேர் மருத்துவமனையில் அவர் காலமானார். அவரது மறைவுச் செய்தியை மருத்துவமனை மருத்துவர் உறுதி செய்துள்ளார். பிரதமர் மோடி பப்பி லஹரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருப்பதுடன் பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.