தமிழ், தெலுங்கு படங்களில் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர்

17

தன்னுடைய தனித்திறமையால் அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்து வரும் இளம் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்…

கொரோனா காலம் வெகுவாக பாதித்த துறைகளில் சினிமாவும் ஒன்று, ஆனால் திறமை வெளிக்கொணர ஊரடங்கு ஒரு தடை அல்ல என நிரூபித்துள்ளார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்

திரையரங்குகள் திறக்காததால் ஆன்லைன் தளங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு ஆன்லைனில் வெளிவந்த தமிழ் வெப் சீரிஸில் , சாரு கே சேகர் இயக்கத்தில் ஜெய் , வாணிபோஜன் நடிப்பில் வெளியான “ட்ரிப்பிள்ஸ்” இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, மேலும் மறைந்த நடிகர் “கிரேஸி மோகனுக்கு” மரியாதை செலுத்தும் விதமாக இம்மாதம் இந்த வெப் சீரிஸ் வெளியானது, முழு நீள நகைச்சுவை தொடராக எடுக்கப்பட்ட இதற்கு சிறந்த முறையில் இசையமைத்து பாராட்டை பெற்றார். மேலும், “பெல்லிச்சூப்புலு” திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ஓ மணப் பெண்ணே திரைப்படம், கார்திக் சுந்தர் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வருகிறது இற்கும் விஷால் சந்திரசேகர் இசையமைக்க உள்ளார்.

மேலும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ராஷ்மிகா நடிக்கும் தெலுங்கு படத்திலும், நாக ஷௌரியா, ரிது வர்மா ஆகியோர் நடிக்கும் தெலுங்கு படங்கள் என இரு தெலுங்கு படங்களுக்கு இசை அமைக்கிறார்..

Leave A Reply

Your email address will not be published.