இவ்விழாவில் இயக்குநர் ராஜராஜதுரை பேசியதாவது:
எத்தனையோ தோல்விகளை நான் என் வாழ்வில் சந்தித்துள்ளேன். என் இன மக்களையும், மாற்று சாதியை சேர்ந்தவர்களையும் வரவேற்கிறேன். அதிர்ச்சியடையாதீர்கள் நான் என் இனம் என சொன்னது மனித இனத்தை, என் சாதி என சொன்னது ஆண் சாதியை, மாற்று சாதி என சொன்னது பெண் சாதியை தான். உலகில் ஆண் சாதி, பெண் சாதி தவிர்த்து வேறு எந்த சாதியும் இல்லை என்பதை நம்புவன் நான். அதைத்தான் இந்தப்படத்திலும் சொல்லியுள்ளேன் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி…
இந்திய காங்கிரஸ், மாநில துணை தலைவர் இநாயதுல்லா அவர்கள் பேசியதாவது:
சாதியை பற்றி சொல்லும் போது ஆண் சாதி, பெண் சாதி என்றார்கள், ஔவையார், சாதி இரண்டான் கொல் வேறில்லை என்று சொல்லியுள்ளார்கள், அவரின் மொழி தழுவி இப்படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். முதல் மனிதன் இந்த மண்ணில் பிறக்கவே இல்லை என்பது தான் உண்மை சொர்க்கத்தில் பிறந்த மனிதன் செய்த தவறுக்காக, படைக்கப்பட்டதே இந்த பூமி. மனிதன் வந்த பல ஆண்டுகளுக்கு பிறகு தான் சாதி இம்மண்ணுக்கு வந்தது. அதனை இப்படம் அருமையாக எடுத்துகாட்டுகிறது. இது ஒரு அற்புதமான படம். மனிதனுக்கு மதம் பிடித்து போனதை, இப்படம் படம் பிடித்து காட்டுகிறது. பூமியின் முதல் மனிதன் ஜாதியின் பெயரால் செய்த தவறை மாற்ற வந்திருக்கிறான். இந்த முதல் மனிதன். நாம் ஒரு தாய் தந்தை வழி வந்தவர்கள். மக்களின் நல்லிணத்திற்காக இப்படம் எடுத்துள்ள இப்படக்குழுவினரை மனதார வாழ்த்துகிறேன் நன்றி