நடுவன் (திரைப்பட விமர்சனம்)

40

படம்: நடுவன்

நடிப்பு: பரத் நிவாஸ், அபர்னா வினோத், கோகுல் ஆனந்த், ஆரதயா ஸ்ரீ, , ஜார்ஜ் மர்யான்,  யோக் ஜேபி, அருவி பாலா, என்.தசரதி.  சுபரர்னன், சுரேஷ் ராஜூ,  மது சூதன்,  தரம்ராஜ் மாணிக்கம்,  வில்வா சக்ரவர்த்தி, ரேவதி, விவேக் மோகன், ஜெயபாலன், மணி, ஜெயகிருஷ்னா, அசோக், ஜாஹீர் பய், சுர்யா சின்னு, லோகேஷ், கிருஷ்னதேவா, அஜன் டமேஷ், வாசுதேவன், வீரா

தயாரிப்பு: லக்கி சஜெர்

இசை:தரண்குமார்

ஒளிப்பதிவு:யுவா

இயக்கம்:ஷரங்

ரிலீஸ்: சோனி லைவ்

கொடைக்கானலில் டீ தொழிற்சாலை நடத்தி வருகிறார் கார்த்தி. இதில்  அவரது நண்பர் சிவாவும் பார்ட்னர். தனது உறவுக்காரர் மகன் குருவை தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்துவிடுகிறார்   கார்த்திக். அத்துடன் வீட்டின் அருகில் உள்ள அறையிலேயே அவனை தங்க வைக்கிறார். எப்போதும் பிஸியாக இருக்கும் கார்த்திக் குடும்பத்தில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் மனைவி கோபப்படுகிறார். அதை பயன்படுத்தி அவருடன் கள்ள உறவு வைத்துக்கொள்கிறார் கார்த்திக் நண்பன் சிவா.. இந்த விஷயம் குருவுக்கு தெரியவருகிறது. அவனை சிவா மிரட்டி வைக்கிறான். ஒரு கட்டத்தில் இந்த ரகசியத்தை கார்த்திக்கிடம் குரு சொல்கிறான். அதிர்ச்சி அடைந்த கார்த்திக் எடுக்கும் முடிவு விபரீதாமாகிறது.

காத்திக்காக பரத் நிவாஸ் நடிக்க, சிவாவாக கோகுல் ஆனந்த், பரத் மனைவியாக அபர்ணா வினோத், குருவாக அருவி பாலா நடித்திருக்கின்றனர். மூன்று கதாபாத்திரங்கள் முக்கியமான ரோல் ஏற்றிருக்கின்றனர். சக பாத்திரங்களும் மற்றொரு கிளை கதையில் பயணிக்கிறது.

அருவி பாலாவும் அவரது நண்பர்களும் மது குடித்துவிட்டு கார் ஓட்டி  ஒருவர் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். இதில் அந்த நபர் கொல்லப்படுகிறார். அந்த கொலை போலீசுக்கு தெரியவர அவர் பாலாவையும் மற்றவர்களையும் 10 லட்சம் கேட்டு மிரட்டுகிறார். அதற்காக பாலாவும் நண்பர்களும் பரத் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகின்றனர். இவர்கள் முகமூடி அணிந்து பரத் வீட்டுக்குள் செல்வதும் மனைவி மற்றும் நண்பனை பழிவாங்க எண்ணும் பரத்தும் கோபத்துடன் இருப்பதும் ஒரே சமயத்தில் அரங்கேறுகிறது. இந்த இரண்டு  விஷயமும் இரு தரப்புக்கும் மோதலை ஏற்படுத்த அந்த கிளைமாக்ஸ் காட்சி சுமார் 15 நிமிடத்துக்கும் மேலாக திகிலுடன் நகர்கிறது.

லக்கி சஜெர் தயாரித்திருக்கிறார்.  கொடைக்கானல் பின்னணியில்  சில்லிட வைக்கும் திரில்லாராக படத்தை இயக்கி உள்ளார் ஷரங்.

தரண்குமார் இசை மேனியை தவழ்ந்து செல்கிறது. யுவா ஒளிப்பதிவு காட்சிகளை கண்முண் தெளிவாக நிறுத்தி இருக்கிறது.

நடுவன் – நீதிமான்.

Leave A Reply

Your email address will not be published.