நாய் சேகர் (திரைப்பட விமர்சனம்)

3

படம்: நாய் சேகர்

நடிப்பு: சதீஷ், பவித்ரா லட்சுமி, ஜார்ஜ் மரியான், மனோபாலா, லிவிங்ஸ்டன் , ஞானசம்பந்தம், இளவரசு, ஸ்ரீமன், சங்கர் கணேஷ், லொள்ளு சபா சுவாமிநாதன், வினோதினி வைத்தியநாதன், சுனிதா,

இசை : அஜீஷ் அனிருத்

ஒளிப்பதிவு: பிரவின் பாலு

தயாரிப்பு: ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ்

இயக்கம்: கிஷோர் ராஜ்குமார்

ஐடி கம்பெனியில் வேலை செய்யும் இளைஞர் சதீஷ். இவரது பக்கத்துவீட்டில் விலங்குகள் மரபணு ஆராய்ச்சி செய்து புதுவகை விஷயங்களை கண்டுபிடிக்கும் ஆராயச்சியாளர் ஜார்ஜ் மரியன் வசிக்கி றார். இவரது வீட்டில்வளரும் நாய் திடீரென்று சதீஷை கடித்துவிட விஷயம் விபரீதமாகிறது. நாயின் குணம் சதீஷுக்கும், சதீஷின் குணம் நாய்க்கும் வந்துவிடுகிறது. இதனால் சதீஷ் படும் அவஸ்தைகள் என்ன? நாய் குணத்திலி ருந்து மீண்டும் மனித குணத்துக்கு அவரால் திரும்ப முடிந்ததா என்பது போன்ற கேள்விகளுக்கு காமெடியுடன் பதில் அளிக்கிறது நாய் சேகர்.

ஆக்‌ஷன் காமெடியைவிட டயலாக் காமெடிசெய்வதில் கில்லாடி சதீஷ். அதுவும் ஹீரோக்களின் நண்பராக வரும்போதே காமெடி பஞ்ச்கள் பேசி சிரிக்க வைப்பார். இப்படத்தில் காமெடி ஹீரோவாகவே நடித்திருக்கிறார் , சும்மா இருப்பாரா? என்னவெல்லாம் பேச வேண்டுமோ அதையெல்லாம் பேசுவ துடன், நாய்குணத்துக்கு மாறியவுடன் நாயை போலவே சைகைகள் செய்து காமெடி வெடிகளை சரமாரியாக வெடித்திருக்கிறார்.

நாய் குணத்தை மாற்றி மீண்டும் சதீஷை மனித குணத்துக்கு மாற்ற மாற்று மருந்து கண்டுபிடிக்கும் நிலையில் சதீஷை கடித்த நாய் காணாமல்போய் மற்றொரு காமெடி சலசலப்பை உண்டாக்குகிறது.

ஹீரோயின் பவித்ர லட்சுமி ஏனோதானோ என்றில்லாமல் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

சதீஷ் மட்டுமல்லாமல் பெரிய காமெடி பட்டாளமே சேர்ந்து அடிக்கும் கொட்டம் கவலையை மறந்து சிரிக்கவைக்கிறது.

விலங்கு மரபணு ஆராய்ச்சியாளராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான் கதையின் ஓட்டத்தை தொடங்கி வைக்கும் கருவி யாக பயன்பட்டிருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகராக தலைகாட்டியிருக்கும் இசை அமைப்பா ளர் சங்கர் கணேஷ் கச்சிதமாக நடித்து மீண்டும் நடிகராக வலம் வருவதற்கான வாய்ப்பை கைவசப்படுத்திக்கொண்டி ருக்கிறார்.
ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் படத்தை தயாரித்திருக்கின்றனர்.
ஸ்பைடர் கடித்தால் ஸ்பைடர் குணம் வந்துவிடும் என்று ஸ்பைடர்மேன் ஹாலிவுட் பட பாணியில் நாய் கடித்தால் நாய் குணம் வந்துவிடும் என்ற கருவை கோவுட்டுக்கு யோசித்த இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் அதை காமெடி களமாக மாற்றி அமைத்திருப்பது புத்திசாலித்தனம்.

அஜீஷ் அனிருத் இசை காட்சிகளுக்கு தேவையான இசையை வழங்கி இருக்கின்றனர். பிரவின் பாலுவின் ஒளிப்பதிவும் சோடை இல்லை.

நாய் சேகர் – பொங்கல் காமெடி விருந்து.

Leave A Reply

Your email address will not be published.