நானும் சிங்கிள் தான் கதை என்ன?

58

 

பட இயக்குனர் பேச்சு..

‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் பத்திரிகை, மீடியா சந்திப்பு நேற்று நடந்தது. படத்தை ஆர்.கோபி டைரக்டு செய்திருக் கிறார். திரி இஸ் ஏ கம்பெனி பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூவே நடிகை கீதா இணைந்து தயாரித்துள்ளனர். இதில் அட்டகத்தி தினேஷ், தீப்தி ஜோடியாக நடித்துள்ளனர். நயன்தாராவைபோல் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பும் ஹீரோ. ஆண்களே வேண்டாம் என்று விலகி செல்லும் ஹீரோயின் இருவருக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களே இப்படம்.
இதுபற்றி இயக்குனர் கோபி கூறியதாவது:
நான் ஜீ தமிழில் வெப் சீரிஸ் செய்துவிட்டு நேரடியாக படம் இயக்கி இருக்கிறேன். வெர்ஜின் பசங்க என்ற சீரிஸை பார்த்துவிட்டு அதுபோல் ஒரு யூத்தான கதை வேண்டும் என்று என்னை அழைத்து வாய்ப்பு வந்தார்கள். நானும் சிங்கிள் தான் புதிய கதை. 90 களின் கிட்ஸ்களுக்கான கனவு படமாக இது உருவாகி இருக் கிறது. பல ஹீரோக்களிடம் கதை கூறினேன் அவர்கள் தயங்கினார்கள். நடிகர் தினேஷிடம் சொன்னால் அவர் புரிந்துகொள்வாரா என்ற சந்தேகத்துடன் அவரிடம் கதை கூறினேன். அவர் கதையில் ஒரு தவறும் இல்லையே சரியாக இருக்கி றது செய்யலாம் என்றார். அதேபோல் இதில் நடித்த வர்கள் சிங்கிளா என்று பார்த்து ஒப்பந்தம் செய்தேன். லண்டனில் படப்பிடிப்பு நடந் துள்ளது. இதில் நடித்திருக்கும் ஹீரோயின் தீப்தி ஆக்‌ஷன் காட்சியில் நடித்திருக்கிறார். கனல் கண்ணன் மாஸ்டர் அவரை ரோபில் காட்டி  தந்தூரி கிக்கன்போல் தொங்க விட்டுவிட்டார். எல்லாவற் றையும் பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நான் இந்த இடத்தில் டைரக்ட ராக நிற்க காரணம் எனது குருநாதர் தமிழ்தாசன். அவர் இங்கு வந்து வாழ்த்தியதும் அதேபோல் தயாரிப்பாளர் கே.ராஜன் வந்து வாழ்த்தி யதும் மிகவும் சந்தோஷம். இந்த படம் 90 கிட்ஸுக்கு மட்டுமல்ல வயதானவர் களுக்கும் பிடிக்கும்.

நிகழ்ச்சியில் கே.ராஜன், தமிழ்தாசன், படத்தில் நடித்தி ருக்கும்  செல்வா, கிருஷ்ணா, கதிர், விகாஷ், நடிகை தீப்தி காஸ்டிங் டைரக்டர் ஸ்வப்னா, இசை அமைப்பாளர் ஹிதேஷ் மஞ்சுநாத் ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.