நானும் சிங்கிள்தான் (பட விமர்சனம்)

123

படம்: நானும் சிங்கிள்தான்
நடிப்பு: தினேஷ், தீப்தி சதி, மொட்ட ராஜேந்திரன், ஆதித்யா, விகாஷ் சம்பத், செல்வேந்திரன், மனோபாலா, ரமா.

இசை: ஹித்தேஷ் மஞ்சுநாத்
ஒளிப்பதிவு: கே.ஆனந்தராஜ்
தயாரிப்பு: த்ரீ இஸ் ஏ கம்பெனி புரடக்‌ஷன் புன்னகை பூவே கீதா
இயக்கம்: ஆர்.கோபி

90களில் பிறந்தவர்களின் இன்றைய நிலையை சொல்லும்  கதையாக உருவாகி இருக்கிறது நானும் சிங்கிள்தான்.  30 வயதை நெருங்கும் நண்பர்கள் தினேஷ், ஆதித்யா கதிர், விகாஷ், செல்வேந்திரன் காதலிக்க பெண் கிடைக்காமல் அலைகின்றனர். தினேஷ் தீப்தியை அடையாளம் கண்டு  காதல் கொள்கிறார். அவருக்கோ காதல், கல்யாணம் என்றாலே பிடிக்கவில்லை. வாழ்கையில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்பதுதான் எண்ணம்.

திடீரென்று தீப்தி லண்டன் பறந்துவிடுகிறார். அவரை தேடி நண்பர்களுடன்  லண்டன் செல்கிறார் தினேஷ். அங்கு தீப்தியை கண்டுபிடித்து தனது காதலை சொல்கிறார் தினேஷ்.

தினேஷிடன் தீப்தி நண்பராக பழகுகிறார் என்றாலும் தீப்தியை காதலியாக எண்ணி பழகுகிறார் தினேஷ்.  தீப்திக்கு முத்தம் கொடுத்து  நட்பை கெடுத்துக்கொள்கிறார் தினேஷ். தீப்தி வெறுத்தாலும் தினேஷ் காதலை சுமந்துக்கொண்டு அவர் பின்னாலேயே திரிவது கொஞ்சம் ஓவராக தெரிந்தாலும் தினேஷ் பார்வையில் அதை இயக்குனர் நியாயப்படுத்தி இருக்கிறார்.

தீப்தி புதுமுகமாக அறிமுகமாகி இருந்தாலும் வேடத்தை வெகு எளிதாக கையாண்டிருக்கிறார். உன்னை என்னால் காதலிக்க முடியாது நீ போய்விடு என்று தினேஷை விரட்டும்போதெல்லாம் பெண் பிரம்மசாரியோ என்று எண்ண வைக்கிறார் பாடல் காட்சிகளில்  கிளாமருக்கு கிளாமர், மற்றும்  வசனம் என காட்சிகளில் நடிப்புக்கு நடிப்பு என அசத்தி இருக்கிறார தீப்தி.

கே.ஆனந்தராஜ் கேமரா  லண்டன் எழிலை செல்லுலாயிடில் அடைத்துகொண்டு வந்திருருக்கிறது. ஹிதேஷ் மஞ்ச்நாத் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது.
இயக்குனர்  ஆர்.கோபி. 90களின் பல்ஸ் அறிந்து காதல் வலை வீசியிருக்கிறார்.

.நானும் சிங்கிள் தான்- காதல் பேசுகிறது.

Leave A Reply

Your email address will not be published.