சென்னை காளிகாம்பாள் கோயிலில் மேயரை சந்தித்த நடிகை நயன்தாரா!.

0

டிகை நயன்தாரா, இப்போது `காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. பின்னர், ’லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியுடன் நடித்துவந்த அவர் அந்தப் படத்தையும் முடித்துவிட்டார். அடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே நயன்தாராவும் அவர் காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். கடந்த வாரம் தனது புது காரோடு கோயிலுக்கு சென்று வழிபட்டார். இந்த நிலையில் தான் சென்னை பாரி முனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

அதே சமயத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனும் சாமி தரிசனம் மேற்கொள்ள வந்தார். அப்போது நயன்தாரா, சென்னை மேயர் பிரியாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். பதிலுக்கு பிரியாவும் நன்றி தெரிவித்து கொண்டார். இதனையடுத்து இருவரும் உடல் நலம் விசாரித்துக்கொண்டனர். அப்போது கோயிலில் இருந்த பக்தர்கள் நயன்தாரா மற்றும் சென்னை மேயரோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.