தீபாவளிக்கு நயன்தாரா படம் ரிலீஸ்: டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் அறிவிப்பு..

வெப் சீரீஸில் சத்யராஜ், ஜெய், காஜல், தமன்னா, சீதா, வாணி

17

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வரும் தீபாவளி தினத்தில் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கி உள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்று இன்று அறிவிக்கப்பட்டதுடன் புதிய போஸ்டரும் வெளியி டப்பட்டது.


இதுபற்றி ஆர் ஜே பாலாஜி கூறும்போது.’கடந்த 15 வருட மாக பக்தி படமே வரவில் லை. ரம்யா கிருஷ்ணன், பானுப்ரியா நடித்ததற்கு பிறகு பக்தி படம் வரவில்லை எனவேதான் நயன்தாரா நடிப் பில் மூக்குத்தி அம்மன் படம் இயக்கினேன். இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் இயக்க வும் எண்ணி உள்ளேன்’ என்றார்.
தமிழ்நாட்டின் புதிய திரை என்ற பெயரில் டிஸ்னி பிஸஸ் ஹாட் ஸ்டார் தொடங்கி இருக்கிறது. அதில் சத்யராஜ், சீதா நடிப்பில் ’மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்’, வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் ’லைவ் டெலி காஸ்ட்’,

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஜெய், வாணி போஜன் நடிக்கும் ’ட்ரிப் பிள்ஸ்’, தமன்னா நடிக்கும் ’நவம்பர் ஸ்டோரிஸ்’ ஆகிய சீரிஸ்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. அதற்கான அறிமுக நிகழ்ச்சி டிஜிட்டல் தளத்தில் இன்று நடந்தது. இதில் கலைஞர்கள் பங்கேற்றனர்.
சினிமாவிலிருந்து டிஜிட்டல் தளத்துக்கு வந்திருக்கும் சத்யராஜ், தமன்னா, காஜல் அகர்வால், வெங்கட்பிரபு, கார்த்திம் சுப்பராஜ் அனைவரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். நிகழ்ச்சியில்  டிஸ்னி பிள்ஸ் ஹாட் ஸ்டார் தலைவர் சுனில் ரயான் (Sunil Rayan- President & Head, Disney+Hotstar) கலந்துகொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.