அறிமுக இயக்குனர் ஜெய்அமர்சிங் இயக்கும் படத்தில் முதன் முதலாக கதா நாயகனாக நடிக்கவிருக்கிறார் நடிகர் லிங்கேஷ்

25

கதாநாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ்

கபாலி, பரியேறும் பெருமாள் கஜினிகாந்த் குண்டு படங்களில் நடித்தவர் லிங்கேஷ். வில்லனாக பல படங்களில் நடித்தவர் முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார்

மெட்ராஸ், கபாலி, ஜடா போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கும்போதே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது தோற்றத்தை மாற்ற உடல் எடையை கூட்டவும், குறைக்கவும் செய்து அந்த கதாபாத்திரத்திற்காக ஈடுபாட்டுடன் நடித்திருப்பார்.

அறிமுக இயக்குனர் ஜெய்அமர்சிங் இயக்கும் படத்தில் முதன் முதலாக கதா நாயகனாக நடிக்கவிருக்கிறார்தயார sh.

கதா நாயகனாக நடிக்கும்
இந்தப்படத்தில் கல்லூரி மாணவர்களின் கதை என்பதால் உடல் எடையை குறைத்து கல்லூரி மாணவர்போல இருக்கவேண்டுமென்று இரண்டே மாதங்களில் பதினாறு கிலோ எடையை குறைத்திருக்கிறார்.

கலர்புல்லான அதே சமயம் சமூககருத்தையும் பேசுகிற கல்லூரி மாணவர்களின் வாழ்வில் நடக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாகவும் , மாணவர்களின் இயல்பான வாழ்வில் நடக்கும் காதல் கொண்டாட்டம் சோகம் அனைத்தையும் பேசுகிற படமாகவும் இருக்கும்.

சமீபத்தில் இந்தபடத்திற்கான போட்டோசூட் நடைபெற்றிருக்கிறது.

இந்தப்படத்திற்குப்பிறகு லிங்கேஷ், இயக்குனர் ப்ராங்ளின் இயக்கும் படத்திலும்,
இதே நிறுவனத்தின் அடுத்தபடத்திலும் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

தனி இசைக்கலைஞராக அறியப்பட்ட ஆப்ரோ இந்தப்படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராகிறார்.

இந்தியில் டோட்டல் தமால் படத்தின் ஜப்பானிய ஒளிப்பதிவாளர் கெய்க்கோ மற்றும் கோபி அமர்நாத்திடம் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கார்த்திக் சுப்பிரமணியம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

Leave A Reply

Your email address will not be published.