கமல் பிறந்தநாளில் புது பட டைட்டில் டீஸர் வெளியீடு

நவம்பர் 7ம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டம்..

21

உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படம் கமல்ஹாசன் 232. லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் கமல்ஹாசன் வெளியிட்டார். இப்படத்தின் டைட்டில் கமலஹாசன் பிறந்தநாள் அன்று வரும் நவம்பர் 7ம் தேதி மாலை 5மணிக்கு வெளியிடப்படுகிறது. ராஜ்கமல் இன்டர் நேஷனல் தயாரிக்கும் இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.

இதுபற்றி ராஜ்கமல் இனடர்நேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையி கூறியிருப்பதாவது:

உலக நாயகன்‌ பத்மபூஷன்‌ கமல்‌ ஹாசனின்‌ 66வது பிறந்த நாள்‌ நவம்பர்‌ 7, 2020 அன்று கொண்டாடப்படுகிறது.
இந்நாளில்‌ ராஜ்கமல்‌ பிலிம்ஸ்‌ இண்டர்நேஷனல்‌ மிகுந்த
பெருமையுடன்‌ வழங்கும்‌ கமல்‌ ஹாசனின்‌ ‘KH 232’ படத்தின்‌ பெயர்‌ வெளியிடப் படுகிறது.
இந்த கொள்ளை நோய்‌ காலத் திலும்‌ இயக்குனர்‌ லோகேஷ்‌ கனகராஜ்‌ மற்றும்‌ குழுவினர்‌ உலக நாயகனுடன்‌ சேர்ந்து படத்தின்‌ பெயர்‌ வெளிவிடு வதற்கான டீஸரை உருவாக்‌கி யுள்ளனர்‌.
உலக நாயகனுடன்‌ இணைந்து சிரமம்‌ பாராமல்‌ இப்படக்‌ குழுவினர்‌ உருவாக்கியுள்ள டீஸர்‌ 7 நவம்பர்‌ அன்று மாலை 5 மணிக்கு டீஸர்‌
வெளியாகிறது. இந்த கோவிட்‌-19 காலத்தின்‌ “புதிய இயல்பில்‌” படம்‌ எடுப்பதற்கு
அரசாங்கம்‌ அறிவித்த அனைத்து வழிமுறைகளை யும்‌ ராஜ்கமல்‌ தயாரிப்பு குழு சரியாக பின்பற்றும்‌. மேலும்‌ கூடுதல்‌ தகவல்கள்‌ வரலாற்று பாரம்பரியம்‌ கொண்ட ராஜ்கமல்‌ தயாரிப்பு நிறுவனம்‌ சார்பில்‌ வழங்கப்படும்‌. உலகநாயகனுக்காக உங்களின்‌ அன்பான வாழ்த்துகளை வேண்டுவதுடண்‌ கமல் ஹாசன் 232. என்ற தலைப்பில்‌ கொண்டாட அழைக்‌கிறோம்‌.

ராஜ்கமல் பற்றி..

நாற்பது ஆண்டுகள்‌ பாரம் பரியம்‌ கொண்ட இல தயாரிப்பு நிறுவனங்களில்‌ ராஜ்கமல்‌ பிலிம்ஸ்‌ இண்டர் நேஷனலும்‌ ஒன்று.
இதில்‌ சிறந்த படங்களான ‘:ராஜ பார்வை’, அபூர்வ சகோதரர்கள்‌, சத்யா, தேவர்‌ மகன்‌ மற்றும்‌ குருதிப்புனல்‌ உள்ளிட்டவையும்‌, வெகுவாக
பேசப்பட்ட ஹேராம்‌, விருமாண்டி, விஸ்வரூபம்‌ மற்றும்‌ வெகுவாக பாராட்டப் பட்ட சதிலீலாவதி ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில்‌ பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள்‌ அறிமுகம்‌ செய்யப் பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.