புதிய படம் ரிலீஸூக்கு அனுமதி : பாரதிராஜா அறிக்கை..

இரண்டு வாரத்துக்கு வி பி எப் கட்டணம் கிடையாது

15

சினிமா திரை அரங்குகளில் புதிய படங்கள் ரிலீஸ் செய்தால் 2 வாரங்களுக்கு வி பி எப் கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து புதிய படங்கள் ரிலீஸுக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து  தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தயாரிப்பாளர்கள் அனைவருக் கும் வணக்கம். திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத் தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர் களின் நலனுக்குத்தான். விபிஎப் சம்மந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலை யில் ஆடு நனைகிறதே என் ஓநாய் அழுத் கதையாக டிஜிட்டல் புரஜெக்‌ஷன் நிறுவனங்கள் திடீரென்று விபிஎப் ஐ தற்காலிகமாக 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்து இருக்கிறது. நல்லது.
திரையரங்கங்களுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில் தயாரிப்பா ளர்களையோ, திரையரங்கு களையோ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் விபிஎப்பை விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பா ளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி விபிஎப் கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.
அதேசமயம் விபிஎப் கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங் கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதிலும் உறுதி யாக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.