தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்ட புது திட்டங்கள்

16

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் சமீபத்தில் முடிந்தது. தலைவராக பதவியேற்றுள்ள முரளி அளித்த பேட்டியில்,

‘கொரோனா பிரச்சனைகளால் சினிமாக்களை தயாரிப்பதும் வெளியிடுவதும் பெரிய பிரச்சினைகளாக மாறிவிட்டன. கடும் கஷ்டங்களில் தவிக்கும் தயாரிப்பாளர்களை மீட்டெடுக்க, குறுகிய கால திட்டங்கள் மற்றும் நீண்டகால திட்டங்களை செயல்படுத்த போகிறோம்.

முதல் கட்டமாக, பல மாதங்களாக தேங்கியுள்ள படங்களை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்போம். சில புதிய திட்டங்களை அமல்படுத்தி, சங்கநிதி அதிகரித்து, நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவுவோம்.

அரசுடன் சுமுக உறவை வளர்த்து, அரசிடமிருந்து பெற வாய்ப்புள்ள அனைத்து உதவிகளையும் தயாரிப்பாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க முயற்சிப்போம்’ என்றார்.

புதிய திட்டங்களால் சங்கநிதி அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம் என்று புதிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.