பொன்னியின் செல்வன் புதினத்துக்கு புதுவடிவம்

மென்பொறியாளினி உருவாகிய ஒலி புத்தகம்..

13

ஐடி துறையில் வேலை பார்த்தவர் ப. இராகவிப்பிரியா. ஆனால் இவரை பொன்னியின் செல்வன் புதினம் கவர அதற்கு புதுவடிவம் கொடுக்க களமிறங்கி அதைச் செய்தும் முடித்திருக்கிறார். இராக கவிப்ரியா மேலும் கூறியதாவது,

இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் 7.5 ஆண்டு காலம் பணி புரிந்த பின்னர் தமிழ் மீது உள்ள ஆர்வமிகுதியின் பேரில் பணியிலிருந்து விலகி கதை கதையாய் கதைக்கலாம் (K2kadhaikalam) என்ற ஒலிப் புத்தகத்தை நிறுவினேன்.
அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் புதினத்தின் ஒலிப் புத்தகம் பாட்காஸ்ட்டு மற்றும் யூட்டியூப் அலைவரிசையில் கட்டணமின்றி வெகு ஜன மக்கள் அதிகம் கேட்கக்கூடியதாக இருக்கிறது. அந்த ஒலிப் புத்தகங்களைக் கேட்ட வரையில் எதிர்பார்ப்பிற்கு மாறுதலாக கதையின் சாரத்தை முழுமையாக ருசிக்கும் வண்ணம் அமைந்திராத குறையை உணர்ந்தேன்.

2300 பக்கங்கள் உள்ள அமர காவியமான பொன்னியின் செல்வன் புதினத்திற்கு என்னால் இயன்ற நியாயம் சேர்பிக்க நான் விளைந்ததின் முயற்சி தான் கதை கதையாய் கதைக்கலாம் (K2kadhaikalam) ஒலிப் புத்தகம்.
இதில் கடுகளவேனும் வெற்றி பெற்றதின் சாட்சியாக உலகளவில் உள்ள தமிழ் அன்பர்களின் வாழ்த்தொலிகள் மின் அஞ்சல், குறுஞ்செய்திகளின் மூலமாக என்க்கு உந்துதலாக என் கன்னி முயற்சிக்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள்.
ஆழ்வார்கடியான், சுந்தர சோழர், நந்தினி ஆகிய கதாபாத்திரங்களுக்கு ஏற்றார் போல் குரல் மாற்றி ஒலி சேர்க்கையளித்திருக்கிறோம். பொன்னியின் செல்வன் புதினத்தில் உள்ள பாடல்கள் அனைத்தையும் தோழர் லாவண்யா ராமச்சந்திரன் மெட்டிசைத்து தன் இனிய குரல் வலத்தால் பாடி மேலும் மெருகூட்டியுள்ளார்.
16 வயது பள்ளி மாணவி முதற்கொண்டு ஐந்தாறு முறை பொன்னியின் செல்வன் கதையை படித்தறிந்த மெல்பர்னை சேர்ந்த 80 வயது தமிழ் மூதாட்டி தோட்டு K2kadhaikalam யின் பொன்னியின் செல்வன் ஒலி புத்தகத்தின் வாயிலாக கதையின் உணர்வுகள் சுருங்காமல் கேட்டு மகிழ்வதாக தெரிவித்துள்ளனர்.
புகழ்பெற்ற பாட்காஸ்ட்டு தரவரிசை பட்டியல் உருவாக்கும் அமைப்பான சார்டபல்ஸ் / Chartables K2kadhaikalam பாட்காஸ்டை இலங்கையில் முதல் தரம் மற்றும் இந்தியா மலேசியா சிங்கப்பூர் குவைத் பெஹ்ரேன் கத்தார் ஆகிய நாடுகளில் முதல் 50 இடங்களில் தரை வரிசை படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.