லைகா – ஷங்கர் இந்தியன் 2 பட விவகாரம்

மத்தியஸ்த்தம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி..

1

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடத்துவதில் பட நிறுவனம் லைகா, இயக்குனர் ஷங்கர் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்ட நிலையில் தீர்வு ஏற்படவில்லை இதையடுத்து பிரச்சி னைக்கு தீர்வு காண மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதியை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது.

இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை கோரி லைகா வழக்கு..

நீதிமன்ற உத்தரவுப்படி இரு தரப்பினனரும் ஏற்கனவே நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த தீர்வும் ஏற்படவில்லை.

இந்நிலையில் இப்பிரச்னையில் நீதிபதி ஆர்.பானுமதியின் அறிக்கைக்கு பிறகு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என  நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.