என்னை விட நிறைய காதல் செய்கிறவர்கள் யாரும் இருக்க முடியாது – இளையராஜா

10

புதுமுகங்கள் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் நேஹா நடித்த , கணேசன் இயக்கிய ‘காதல் செய்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று இசைஞானியின் ஸ்டூடியோவில் நடந்தது. இந்த விழாவிற்கு இயக்குநர்கள் பாரதிராஜா, பி.வாசு உள்பட பலர் வந்திருந்தனர்.

ட்ரெய்லர் வெளியிட்ட இளையராஜா பேசியதன் ஹைலைட் இதோ…

“எதிர்கால பாரதிராஜாக்களே… நிகழ்கால பி.வாசுக்களே… எதிர்கால இளையராஜாக்களே…” என்றவர் ஒரு சிரிப்பை சிந்திவிட்டு, “ஏன்யா, காலகாலத்துக்கும் பாரதிராஜாக்கள், இளையராஜாக்கள் வருவாங்களா? கிடையவே கிடையாது. ஒரே ஒரு பாரதிராஜாதான். ஒரே ஒரு பி.வாசுதான். ஒரே ஒரு இளையராஜாதான். ஏன்யா, சூரியன் மாதிரி இன்னொரு சூரியன் உலகத்துல வரல? ஒண்ணுதான் வரும்.

அது என்ன தென்னமரமா, ஆயிரம் வைக்கறதுக்கு… ஒரு மரத்துல இருந்து இன்னொரு மரம் பொறக்கறதுக்கு… பொறந்து வளரணும்யா… ‘திருவேறு தெள்ளிய ராதலும் வேறு’ங்கற குறள் மாதிரிதான். செல்வம் படைச்சவனா இருக்கறது வேறு. ஆனா, ரொம்ப தெளிந்த அறிவோடு இருப்பது வேறு. திருவேறுனா இன்னொரு அர்த்தமும் இருக்கு. நீ தெய்வமாகக்கூட இருக்கலாம்டா… ஆனா, தெள்ளியராக இருப்பது ரொம்ப கஷ்டம்.

இந்தப் படத்தை எடுக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டதாகச் சொன்னார்கள். ஒரு படத்தை எடுக்க எவ்வளவு வேணாலும் கஷ்டப்படலாம். படத்தைப் பார்க்கறவங்களுக்குத்தான் கஷ்டம் வரக்கூடாது. ‘காதல் செய்’னு டைட்டில் வச்சிட்டீங்க. காதல் செய்ய பார்க்கறேன். என்னை விட நிறைய காதல் செய்கிறவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனா, எதைக் காதலிக்கணும் என்பதுல நான் ரொம்ப தெள்ளியனா இருக்கேன்.16 வயதினிலே பண்ணும் போது இவ்ளோ கேமரா கிடையாது. இவ்ளோ மீடியா கிடையாது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்’ எனப் பேசி விழாவுக்கு வந்தவர்கள் அனைவரையும் கவர்ந்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.