போலீஸ் அதிகாரியாக நிவேதா பெத்துராஜ்

10

ரெட் தெலுங்கு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நிவேதா பெத்துராஜ்.

தமிழில் அருண் விஜய் நடித்த படம் தடம். இதில் அவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மகிழத் திருமேனி இயக்கியிருந்தார். இந்த படம் தெலுங்கில் ரெட் என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. ஜனவரி 14ம் தேதி ரிலீசாகிறது.தமிழில் வித்யா நடித்த வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.

அவர் கூறியதாவது: இதற்கு முன்பும் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறேன். இந்தப் படத்தில் ஏற்றுள்ள கேரக்டர் வித்தியாசப்படும். பெண் போலீஸ் எப்படி இருப்பாரோ அதுபோல் யதார்த்தமான வேடத்தில் நடித்துள்ளேன். இந்தப்படத்தின் இயக்குனர் கிஷோர் திருமுலாவுக்கு தமிழ் தெரியும். படப்பிடிப்பின் போது நாங்கள் தமிழில்தான் பேசிக்கொள்வோம். படத்தின் ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்

Leave A Reply

Your email address will not be published.