படம்: ஓ மணப்பெண்ணே
நடிப்பு: ஹரிஸ் கல்யாண், பிரியா பவான் சங்கர், வேணு அரவிந்த்,கேஎஸ்ஜி வெங்கடேஷ், அன்புதாசன், அபிஷேக் குமார், குக் வித் கோமாளி 2 அஷ்வின்
இசை: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு:கிருஷ்ணன் வசந்த்
தயாரிப்பு: ஏ ஸ்டுடியோஸ் எஸ் பி. சினிமாஸ்
இயக்கம்:கார்த்திக் சுந்தர்
என்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை எதுவும் செய்யாமல் நண்பர்களுடன் பொழுதை போக்குகிறார் ஹரிஸ் கல்யாண். அவரது பெற்றோர் ஜோதிடம் பார்க்கும்போது, திருமணத்துக்கு பிறகுதான் வேலை கிடைக்கும் என்று சொல்வதால் ஹரிஸுக்கு திருமண ஏற்பாடு செய்கின்றனர். போகவேண்டிய இடத்துக்கு செல்லாமல் விலாசம் மாறி பிரியா பவானி வீட்டுக்கு சென்றுவிடு கின்றனர். அப்போது தனி அறையில் ஹரிஸும், பிரியாவும் சிக்கிக்கொள் கின்றனர். அவர்களை மீட்கும் முயற்சி நடக்கிறது. இதற்கிடையில் பிரியா, ஹரிஸ் இருவரும் தங்களது பழைய காதல் வாழ்கையை பகிர்ந்துக்கொள்கின்றனர். பிறகு ஹரிஸ் தனியாக ஒரு உணவகம் நடத்தி அதில்வெற்றி பெற எண்ணுகிறார். அவரால் அதை நிறைவேற்ற முடிந்தததா? காதல் தோல்வி அடைந்த ஹரிஸ், பிரியா ஜோடி வாழ்க்கையில் இணைந்தார்களா என்பதற்கு கிளை மாக்ஸ் பதில் சொல்கிறது.
வளர்ந்து வரும் ஹீரோ ஹரிஸுக்கு ஏற்ப மென்மையான கதையாகவே இப்படம் அமைந்திருக்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்து கவர்கிறார்.
சமையல் கலை கற்று அதில் ஜெயிக்கப்போவதாக ஹரிஸ் சொல்வதை கேட்டு சமையல் காரனாகப்போகிறாயா என்று அவரது தந்தை வேணு அரவிந்த் கடுப்படிப்பது காமெடி வீச்சு.
நடமாடும் உணவகம் தொடங்கி அதில் தான் சமைப்பதை பிரியாவுக்கு கொடுத்து சாப்பிட்டுவிட்டு அவர் என்ன சொல்வாரோ என்ற ஹரிஸின் ஏக்கம் முகத்தில் வெளிப்படுகிறது.
பிரியா பவானி சங்கர் எம் பி ஏ பட்டதாரியாக மெச்சூர்டான கதாபாத்திரத்தில் வருகிறார். ஹரிஸின் வெற்றிக்கு அவர் உடனிருந்து சப்போர்ட் செய்வது அழகான நட்பின் வெளிப்பாடு அத்துடன் காதலும் இருவருக்குள்ளும் இழையோடிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.
சகபாத்திரங்களில் நடித்திருக்கும் வேணு அரவிந்த், கே எஸ் ஜி வெங்கடேஸ், அன்புதாசன், அபிஷேக் குமார், குக்வித் கோமாளி 2 அஷ்வின் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற பெல்லி சூப்புலு படமே தமிழில் 5 வருடத்துக்கு பிறகு ஒ மணப்பெண்ணே வாக இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுந்தர்.
விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் மனம் மயக்கு கிறது.வண்ணங்கள் நிறைந்த காட்சி களை கண்களுக்கு விருதளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த்.
ஓ மணப்பெண்ணே – இளவட்டங்களை கவரும்.