கண்ணாம்பா இறந்த நாளின்று

3

தமிழ் திரையில் தனது சிறந்த நடிப்பால் அம்மா பாத்திரங்களுக்கு உயிரூட்டி, அம்மா என்றாலே அது இவர்தான் என்று அடையாளமாகத் திகழ்ந்தவர் நடிகை கண்ணாம்பா.

தாய்மொழி தமிழாக இல்லாவிட்டாலும், சொந்தக்குரலில் சுத்தமாக, தெளிவாகத் தமிழ்பேசி, ஏற்றுக்கொண்டபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர் அவர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என்று 150 க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் ப.கண்ணாம்பா.

பல்வேறு கதாபாத்திரங்களில் இவர் நடித்திருந்தாலும், ‘மனோகரா’ திரைப்படத்தில் கலைஞர் கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களை கணீரென்ற குரலில் பேசி கைதட்டல் பெற்ற இவரது கம்பீர நடிப்பு தான், மக்கள் மனதில் இவரை இடம்பெற செய்ததோடு, இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கவும் செய்திருக்கிறது.

பழம்பெரும் நடிகை கண்ணாம்பா, தியாகராஜ பாகவதருக்கு ஜோடியாகவும், சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு அம்மாவாகவும் நடித்து புகழ்பெற்றார். சினிமா உலகில்
அந்தக் காலத்திலேயே லட்சக் கணக்கில் சம்பாதித்தவர் அவர். ஆனால் சொந்தப் படம் எடுத்து, சம்பாதித்த அனைத்தையும் இழந்து கண்ணீர் கடலிலும்,
கடன் கடலிலும் மூழ்கிய முதல் நடிகை அவர்தான்.

ஸ்ரீராஜ ராஜேஸ்வரி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய கண்ணாம்பா பி.யூ.சின்னப்பா நடிப்பில் ஹரிச்சந்திரா என்ற படத்தை பிரமாண்ட
பொருட் செலவில் தயாரித்தார். அந்த நேரத்தில் கன்னடத்தில் தயாரான ஹரிச்சந்திர படம் தமிழில் டப் செய்யப்பட்டு க ண்ணாம்பாவின் ஹரிச்சந்திராவுக்கு
முன்னமே வெளியானதால் படுதோல்வி அடைந்து பெரும் நஷ்டத்தை சந்தித்தார். அதன்பிறகு நாகபஞ்சமி என்ற புராண படத்தை தயாரித்தார். இதில் அஞ்சலிதேவி,
எஸ்.வரலட்சுமி, தங்கவேலு நடித்தனர். இதே கதை மோகனராவ், ஜமுனா, ஜானகி நடிப்பில் கன்னடம் மற்றும் தெலுங்கில் த ரானது. இந்தப் படம்
கண்ணாம்பாவின் நாகபஞ்சமிக்கு முன்பே நாகதேவதை என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. கண்ணாம்பாவின் ஒரிஜினல்
நாகபஞ்சமி பெரும் தோல்வி அடைந்தது. இதிலும் பெரும் நஷ்டம் அடைந்தார்.

அதன் பிறகும் அவர் தயாரித்த நவஜீவனம், ஏழை உழவன் படங்களும் தோல்வி அடையவே பெரும் பொருளாதார சிக்கல்களை உருவாக்கி பெரும்
கடனாளியானார். அவரின் தயாரிப்பு நிறுவனமான ராஜ ராஜேஷ்வரி பிலிம்ஸ் சீர்குலைந்து போனது. நடிப்பில் ரசிகர்களை அழவைத்த கண்ணாம்பா, தன் இறுதி
காலத்தை கண்ணீருடேனேயே கழித்தார்.

Leave A Reply

Your email address will not be published.