மியூசிக் டைரக்டர் டி.ஜி.லிங்கப்பா மறைந்த நாளின்று

22

பி.சுசீலாவை இசை உலகின் உச்சத்தில் தூக்கி நிறுத்திய பாடல்களில் ஓன்று “அமுதை பொழியும் நிலவே” என்பது எல்லா ரசிகர்களுக்கும் தெரிந்த உண்மை. அப்பாடல் இடம் பெற்ற தங்கமலை ரகசியம் படத்துக்கு இசை அமைத்தவர் T.G.லிங்கப்பா (திருச்சிராப்பள்ளி கோவிந்தராஜுலு லிங்கப்பா )

திருச்சியில், ஒரு இசை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவரின் தந்தை “கோவிந்தராஜுலு நாயுடு”வும் ஒரு மாபெரும் இசை கலைஞர். அவரும் “பாக்தாத் திருடன்”, “மாய மனிதன்”, “ராஜபக்தி”. “கள்வனின் காதலி” போல பல படங்களுக்கு இசை அமைத்தவர். அவர் இசை அமைப்பிலும் பி.சுசீலா அவர்கள் பல பாடல்களை பாடி இருக்கிறார்.

T.G.லிங்கப்பா தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இசை அமைத்து இருக்கிறார். கன்னடத்தில் மட்டுமே இவர் இசை அமைத்த படங்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டும். B.R.பந்துலு தயாரித்து டைரக்ட் செய்த பல கன்னட படங்களுக்கும் இவரே இசை அமைத்து வந்தவரிவர்.

இவர் இசை அமைத்த சில பாடல்கள் இதோ..

“என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே”

“கோட்டையிலே ஒரு ஆலமரம் – அதில்
கூடு கட்டும் ஒரு மாடப்புறா”

“செவ்வந்திப்பூ செண்டு போல கோழிக்குஞ்சு – தன்
சிறகுக்குள்ளே குடியிருக்கும் கோழிக்குஞ்சு”

“கல்யாண ஊர்வளம் பாரு
மாப்பிள்ளை பெண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னுது பாரு
காரணம் நீயே சொல்லு…”

“பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளம் இல்லை – நல்ல
உள்ளம் இல்லை – என்றும்
பெண்ணாசை கொண்டோர்க்கு கண்ணும் இல்லை – இரு
கண்ணும் இல்லை”

“தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே
அந்தி பகலாய் எந்தன் மனதில்
அருள் விளங்கும் தெய்வமே”

” ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகிப் பிரிவது துயரம் ”

“அமைதி அமைதி
உலகமெங்கும் ஒரே அமைதி”

Leave A Reply

Your email address will not be published.