ஊமைச் செந்நாய் (திரைப்பட விமர்சனம்)

27

படம்: ஊமைச் செந்நாய்

நடிப்பு: மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி, சாய் ராஜ்குமார், கஜராஜ், ஜெய்குமார், அருள் டி ஷங்கர்

இசை:சிவா

ஒளிப்பதிவு: கல்யாண் வெங்கட் ராமன்

தயாரிப்பு: ஆக்‌ஷன், ரியாக்‌ஷன் நிறுவனம், லைப் கோஸ் ஆன் பிக்சர்ஸ்
இயக்கம்: அர்ஜூனன் ஏகலைவன்

பழி சுமத்தப்பட்டு டாக்டர் தொழில் செய்ய முடியாதபடி சிறையில் அடைக் கப்பட்ட மைக்கேல் தங்கதுரை, சிறையி லிருந்து வந்த பிறகு சம்பளத்துக்காக தனியார் டிடெடக்டிவ் நடத்தும் ஒருவரிடம் வேலை செய்கிறார். அமைச்சரிடம் பல வருட,ம் பி ஏவாக இருந்தவரை பின்தொடர்ந்து அவரைப் பற்றிய உண்மைகளை கண்டறியச் சொல்லி மைக்கேலுக்குவேலை தரப்படுகிறது. இதற்கிடையில் சனம் ஷெட்டியுடன் காதல் மலரவே வேறு வேலைக்கு செல்ல மைக்கேல் எண்ணுகிறார். தனது முதலாளியிடம் சொல்லிவிட்டு அதிலிருந்து விலகுகிறார். இதற்கிடையில் தான் கண்காணித்த அமைச்சரின் பி ஏ வை தொடர்புகொண்டு ’உங்களை சிலர் பின்தொடர்கிறார்கள் ஜாக்கிரதை’ என்று எச்சரிக்கிறார் மைக்கேல். உஷார் அடையும் பி ஏ குடும்பத்துடன் தப்பிச் செல்ல எண்ணு கிறார். இந்நிலையில் அவரை அமைச்சரின் ஆட்கள் குடும்பத்துடன் கடத்தி சென்று அடித்து உதைத்து எதிர்கட்சியினரிடம் அமைச்சரைப்பற்றி சொன்ன ரகசியம் என்ன என்று கேட்கின்றனர். ஒரு கட்டத்தில் பல கோடிக்கு விலைபேசி அமைச்சரின் அந்தரங்க வீடியோவை அவர் எதிர்க் கட்சிக்குதர பேரம் பேசியது தெரியவர அந்த வீடியோவை கைப்பற்ற அமைச்சர் தனது ஆட்களிடம் சொல்கிறார். அந்த வீடியோ கிடைத்ததா? மாஜி பி ஏ என்னவாகிறார் என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

கிரைம், த்ரில்லர் பாணி கதை என்பதால் ரொம்பவே க்ரிப்பாக செல்கிறது ஸ்கிரிப்ட்.

ஹீரோ மைக்கேல் தங்கதுரை அமைச்சரின் மாஜி பி ஏவை பின்தொடர்ந்து எந்த பெண்ணுடனாவது பேசுகிறாரா என்று கண்காணிப்பதும், அதை வீடியோ எடுப்பதுமாக செய்துக்கொண்டிருக்க, மாஜி பி ஏவை பின்தொடர்வது பெண் விஷயத்துக்காக அல்ல அதில் பெரிய அரசியல் உள்ளடங்கி இருக்கிறது என்ற சஸ்பென்ஸ் முடிச்சுக்கள் மெல்ல மெல்ல அவிழ்க்கப்படும்போது கதை சூடு பிடிக் கிறது.

ஹீரோ மைக்கேல் தங்கதுரை ஹீரோயிசம் காட்டாமல் ஆக்‌ஷன் காட்சிகளில் இயல் பாக மோதுவதால் மனதில் இடம் பிடிக் கிறார். பில்டப் இல்லாமல் அமைக்கப் பட்டிருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் இயல்புத் தன்மையை தக்க வைக்கிறது,

சனம் ஷெட்டி சில காட்சிகள் வருகிறார் நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை செய்து முடித்திருக்கிறார். 2ம் பாதி கதை இவரது கொலையை மையமாக வைத்து நகர்வதால் ஆள் இல்லாவிட்டாலும் பேசப்படும் பாத்திரமாக கடைசிவரை தொடர்கிறார் சனம்.

சேதுவாக வரும் சாய் ராஜ்குமார் பாத்திரம் திடீர் முக்கியத்துவம் பெறுகிறது. ஹீரோ வுடன் சரிக்கு சரியாக மோதி அசர வைக் கிறார். டிடெக்டிவாக கஜராஜ் நடித்துள்ளார்.

சிவா இசை அமைத்திருக்கிறார். காட்சி களில் முரட்டுத்தனம் தெரிய வேண்டும் என்பதற்காக பல காட்சிகளில் வெளிர் மஞ்சள் நிற பின்னணியை பயன்படுத்தி காட்சிக்கு உயிரூட்டுகிறார் ஒளிப்பதிவா ளர் கல்யாண் வெங்கட் ராமன்.

வித்தியாசமான தலைப்பு வைத்து ஆங்கில பட பாணியில் டிடெக்டிவ் கிரைம் ஸ்டோரியை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அர்ஜூனன் ஏகலைவன்.

ஊமை செந்நாய் – ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் பிரியர்களுக்கு பிடிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.