மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை தொழிற்சங்கப்பேரவை தொடக்கம்

1

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை தொழிற்சங்கப்பேரவை துவக்க விழா, அதன் நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் கர்ம வீரர் காமராஜர் 119வது பிறந்த நாள் விழா வரும் வியாழக்கிழமை (15.07.2021) அன்று காலை 11.00 மணியளவில் நமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் தலைவர் கமல்ஹாசன்  கலந்து கொண்டு தலைமை தொழிற் சங்க பேரவையின் பெயரை அறிவித்து, துவக்கி வைப்பதோடு, அதன் நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குகிறார்.

அத்துடன் கர்ம வீரர் காமராஜரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யவிருக்கிறார்.

பிறகு கட்சியின் தலைமை அலுவலகத்தின் வாயிலில் தலைமை தொழிற்சங்க பேரவையின் கொடியை ஏற்றி வைத்து 119 நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதனை மக்கள் நீதி மய்யம். அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.