ஆஸ்கர் விருது பட்டியல் – முழு விவரம்!

1

ஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்றது. ஆஸ்கர் விருது விழாவை இந்த ஆண்டு 3 பெண் தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர் கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.

மேலும் இந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் யுக்ரேன் மக்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வாசகங்கள் திரையிடப்பட்டன. முன்னதாக இந்த விழாவில் யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி காணொளி காட்சி வாயிலாக தோன்றிப் பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக, திரையில் சில இடம்பெற்ற வாசகங்களில் “மோதல் காலங்களில் நமது மனிதாபிமானத்தை வெளிப்படுத்த திரைப்படம் ஒரு முக்கியமான வழியாகும், உண்மையில் மில்லியன் கணக்கான குடும்பங்கள் யுக்ரேனில் உணவு, மருத்துவ பராமரிப்பு, சுத்தமான நீர் மற்றும் அவசர சேவைகளின் தேவைக்காக காத்திருக்கின்றன,” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த விழாவில் டியூன் படத்திற்கு அதிகபட்சமாக ஆறு விருதுகள் கிடைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு யார், யாருக்கு விருது கிடைத்தது என்பதை பார்ப்போம்.

சிறந்த படம்- கோடா

சிறந்த நடிகை- ஜெசிகா சாஸ்டெய்ன்(The Eyes of Tammy Faye)

சிறந்த நடிகர்- வில் ஸ்மித் (கிங் ரிச்சர்ட்)

சிறந்த இயக்குநர்- ஜேன் காம்பியன்( தி பவர் ஆஃப் தி டாக் )

சிறந்த ஒரிஜினல் பாடல்- நோ டைம் டூ டை( நோ டைம் டூ டை) இசை- பில்லி எல்லிஷ், ஃபின்னியஸ் ஓ கானல்

சிறந்த ஆவண படம்- சம்மர் ஆஃப் சோல்

சிறந்த தழுவல் திரைக்கதை- கோடா

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை- பெல்ஃபாஸ்ட்

சிறந்த ஆடை வடிவமைப்பு- ஜென்னி பீவன் ( க்ரூயல்லா )

சிறந்த சர்வதேச திரைப்படம்- டிரைவ் மை கார்(ஜப்பான்)

சிறந்த துணை நடிகை- அரியானா டிபோஸ் (வெஸ்ட் சைட் ஸ்டோரி)

சிறந்த துணை நடிகர்- ட்ராய் கோட்சுர் (கோடா)

சிறந்த அனிமேஷன் படம்- என்கான்டோ

சிறந்த ஒரிஜினல் இசை- ஹான்ஸ் ஜிம்மர் (டியூன்)

சிறந்த ஒளிப்பதிவு- க்ரெய்க் ஃப்ரேசர் (டியூன்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்- டியூன், பால் லாம்பர்ட், ட்ரிஸ்டன் மைல்ஸ், பிரையன் கானர், ஜெர்ட் நெஃப்சர்

சிறந்த எடிட்டிங்- ஜோ வாக்கர் (டியூன்)

சிறந்த சவுண்ட்- டியூன், மேக் ரூத், மார்க் மான்கினி, தியோ கிரீன், டக் ஹெம்ஃபில், ரான் பார்லட்

சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன்- டியூன்

Leave A Reply

Your email address will not be published.