சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து..

16

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1950ம் ஆண்டு இதே நாளில் பிறந்த ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை  இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ‘‘அன்புள்ள ரஜினிகாந்த் ஜி, மகிழ்ச்சிகரமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.

ரஜினிகாந்த் பிறந்த தினம் இம்முறை அவரது அரசியல் பிரவேச அறிவிப்புடன் வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இம்மாதம் 31ம் தேதி புதிய கட்சிக்கான தேதி அறிவிக்கப் போவதாகவும், ஜனவரியில் கட்சியை தொடங்கப் போவதாகவும் ஏற்கனவே ரஜினி தெரிவித்திருக்கிறார். பிறந்தநாளையொட்டி போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு வாசலில் அதிகாலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். ‘அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்’’ என்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட் அணிந்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.