லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கே.குமார் தயாரித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம், வரும், 12ம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே சந்தானத்தை கதாநாயகனாக வைத்து, ஏ1 என்ற வெற்றிப்படத்தை இயக்கிய, ஜான்சன் கே, இப்படத்தை இயக்கியுள்ளர். சந்தானம் மிகவும் கலகலப்பாக நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடம் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, இந்த படத்தின் திரையரங்கு வினியோக உரிமையை பெற்றுள்ள, டாக்டர் பிரபு திலக் கூறியதாவது: இது, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமாக இருக்கும். படத்தின் கானா பாடல்கள், பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளன.
சந்தானத்துக்கு ஜோடியாக, அனைகா சோடி நடித்துள்ளார். இதில், சாஷ்டி, ராஜேந்திரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். முழுநீள ரொமான்டிக், காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஆர்தர் கே.வில்சனின் சிறந்த ஒளிப்பதிவு இப்படத்திற்கு மெருகூட்டி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.