பாரிஸ் ஜெயராஜ் (பட விமர்சனம்(

57

படம்: பாரிஸ் ஜெயராஜ்
நடிப்பு: சந்தானம், அனைகா சோடி, சஸ்டிகா, மொட்டை ராஜேந்திரன்
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: ஆர்தர் வில்சன்
தயாரிப்பு: லார்க் ஸ்டுடியோஸ் குமார்
இயக்கம் ஜே.ஜான்சன்

சந்தானம் படம் என்றால் காமெடி இருக்கும் என்ற நம்பிக்கையை உறுதி செய்யும் மற்றொரு படம் பாரிஸ் ஜெயராஜ்.

கானா பாட்டில் கெட்டிக்காரர் சந்தானம். கல்யாணம், கச்சேரி எல்லாவற்றிலும் சந்தானந்த்தின் கானா பாட்டுத்தான் எதிரொலிக்கிறது. கல்லூரி கலைவிழாவுக்கு அவரை பாட அழைக்கிறார் கல்லூரி மாணவி அனைகா சோடி. அவரை சந்தானம் காதலிக்கிறார் ஆனால் அவர் வேறுவொருவரை காதலிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அந்த பாய்ஃபிரண்டு வேறு பெண்ணுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பிரிகிறார். இதையடுத்து சந்தானம், அனைகாவுக்கு காதல் மலர்கிறது. ஆனால் அந்த காதலில் ஒரு சிக்கல். அனைகா சந்தானத்தின் தங்கை என்ற விவரம் தெரிகிறது. அவர்கள் காதலை சந்தானத்தின் தந்தையே பிரிக்க முற்சிக்கிறார். சந்தானம், அனைகா இருவரும் கல்யாண மேடை வரை செல்கின்றனர். அடுத்த நடந்தது என்ன என்பதை காமெடியாக விளக்குகிறது.

சந்தானம் கானா பாட்டு பாடினாலும் காஸ்டியூம்களில் வைரைட்டியாக பளபளகிறார். தொடக்க காட்சியில் தன்னுடைய காதலை பிரித்தது தனது தந்தைதான் என்று தெரிந்ததும் அவர் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டி அர்ச்சனை செய்கிறார். அனைகாவுடனான காதலை வளர்க்கும் சந்தானம் எப்படியாவது அந்த காதலை ஒகே செய்து அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முயற்சிப்பதும் செல்போனில் கான்ப்ரஸ் கால் போட்டு அவரது தந்தையிடம் பேச முயற்சிக்க அந்த வம்பில் சிக்காமல் சந்தானம் தந்தை நழுவதும் கலாட்டா காமெடி.

என்னை சண்டைபோட வேண்டாம்னு சொல்றாங்க என்று சொல்லிவிட்டு சண்டை காட்சியிலும் ஒரு கை பார்க்கிறார் சந்தானம். அனைகாவுடன் ரெஸ்டாரண்ட் வரும் சந்தானம் அங்கு தனது தந்தை இருப்பதை பார்த்து நீ ஏன் இங்கு வந்த என்று கலாட்டா செய்வது,அதேபோல் அனைகாவும் அவரை பார்த்துவிட்டு அப்பா இங்கு வந்திருக்கிறார் வா போய்விடாலாம் என பரபரப்பது ருசிகரம்

சந்தானத்தின் தந்தையாக வருபவர் டுப்ளிகேட் பிரகாஷ்ராஜ்போல் இருக்கிறார். ஆனால் வில்லத்தனம் செய்யாமல் காமெடியில் பின்னியிருக்கிறார்.

மொட்டை ராஜேந்திரனுடன் டிவி காமெடி நடிகர்கள் என திரை முழுவதும் அண்ணன் தங்கைக்குள் காதல் என்ற கருவை காமெடியாக செல்லி விரசத்தை தவிர்த்திருக்கிறார் இயக்குனர் ஜான்சன்.

சந்தோஷ் நாரயாணன் இசையில் காமெடி கான மழை பொழிகிறது
வலி மாங்கா வலி  குத்தாட்டம் போட வைக்கும்.

பாரிஸ் ஜெயராஜ்- காமெடி விருந்து.

Leave A Reply

Your email address will not be published.