ஹாரிஸ் ஜெயராஜ், பாரிஸ் ஜெயராஜிக்கு என்ன வித்தியாசம்?

நடிகர் சந்தானம் பதில்..

65

 

பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை ஜான்சன் இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். அனைகா சோடி ஹீரோயினாக நடிக்கி றார். லார்க் ஸ்டிடியோஸ் சார்பில் குமார் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின்  மீடியா சந்திப்பு  சென்னை பிரசாத் ஸ்டுடியோ வில் இன்று காலை  நடந்தது.

பட ஹீரோ சந்தானம் கலந்து பேசினார். அவர் கூறியதாவது:

பாரிஸ் ஜெயராஜ் படத்தில் கானா பாடும் பாடகராக நடித்திருக்கிறேன். புளியந்தோப்பு ராயபுரம், பாரிஸ் கார்னர் பகுதிகளில் கானா பாடல்கள் பிரபலம். ஒரிஜனலாகவே கானா பாடல் பாடுபவர்கள் பாடல் எழுதி பாடி இருக்கின்றனர். கானா என்பது ஒரு தனி தமிழ் பாடல் கிடையாது இந்தி, ஆங்கிலம், மலையாளம் என எல்லா மொழியிலும் கலந்து இந்த பாடலில் வரிகள் இடம் பெற்றிருக்கும்.
நான் நடித்த பிஸ்கோத் படம் கொரோனா லாக் டவுன் தளர்வில் வெளியானது. ஒடிடியில் படத்தை வெளியிடு வதா? தியேட்டரில் வெளியிடு வதா என்று பேசிக்கொண்டி ருந்தபோது தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அப்போது என்னை இந்த நிலைக்கு உயர்த்திய எனது ரசிகர்களை அழைத்து கேட்டேன். அவர்கள் தியேட்டரில் வெளியிடுங்கள் நாங்கள் இருக்கிறோம் என்றார்கள். இதையடுத்து தியேட்டரில் வெளியிட்டோம். பாரிஸ் ஜெயராஜ் பிப்ரவரி 12ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. நகைச்சுவை படமாக இது உருவாகி இருக்கிறது. திடீரென்று ஆக்‌ஷன் படத்தில் ஏன் நடிப்பதில்லை என்று சிலர் கேட்கிறார்கள். இப்படி என்னை ஏன் குழப்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆக்‌ஷன் படத்தில் நடித்தால் ஏன் காமெடி படத்தில் நடிப்ப தில்லை என்கிறார்கள். ஆக்‌ஷனெல்லாம் வேண்டாம் இப்போதைக்கு காமெடியே நன்றாக போய்க்கொண்டிருக் கிறது அதுவேபோதும் அரசியல் கட்சியில் சேர்வீர் களா என்கிறார்கள். எந்த கட்சியில் ராஜ்யசபா எம் பி பதவி தருகிறார்களோ அந்த கட்சியில், சேர்ந்துக்கொள்வேன். ஹாரிஸ் ஜெயராஜ் பாரிஸ் ஜெயராஜுக்கும் என்ன வித்தியாசம் என்கிறார்கள் அது ஹாரிஸ் இது பாரீஸ் இதுதான் வித்தியாசம். 

இவ்வாறு சந்தானம் கூறினார்.

இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை குறிக்கும் வகையில் பாரிஸ் ஜெயாராஜ் என டைட்டில் வைக்கப்பட்டதா என்றதற்கு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதில் அளித்தார்.

அவர் கூறும்போது,’பாரிஸ் ஜெயராஜ் என்று டைட்டில் வைக்கும்போதே யார் மனதையும் புண்படாமல் இருக்க வேண்டும் என்று ஆலோசித்துதான் வைக்கப்பட்டது. யார் மனதாவது புண்படும்படியான தலைப்பாக இருந்தால் நானே ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன். பாரிஸ் ஜெயராஜ் என்பது படத்தில் நல்ல கதாபாத்திரம்’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.