கமல்ஹாசனுக்கு தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு

3வது நாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

15

வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் களுடனான கலந்துரையாடல் கூட்டம்

 

சென்னையில் நடந்து வருகிறது. 3 வது நாளாக இன்று கமல்ஹாசன் கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது

அவருக்கு கட்சி தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி தலைவர் கமல்ஹாசன்  முன்னிலையில் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக சட்ட மன்ற தேர்தலையொட்டி நடக்கும் இந்த கூட்டத்திற்கு பிறகு சில தினங்களில் தமிழகம் முழுக்க கமல்ஹாசன் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதற்காக சிவப்பு நிறத்தில் பிரத்யேக வேன் ரெடியாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.