பசும் பொன் தேவர் வாழ்க்கை வரலாறு படம் இலவசமாக பார்க்கலாம்

ஒ டி டி தளத்தில் இன்று ரிலீஸ்

18

பசும் பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு ஆவண படம் “பசும்பொன் தேவர் வரலாறு”. இப்படம் இன்று யூ டியில் வெளியாகிறது. அதனை இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பட இயக்குனர் ஆப்ரகாம் லிங்கன் கூறியதாவது:

நண்பர்களுக்கு அன்பான வணக்கம் ?. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு எங்களது குழு முயற்சியில் உருவான தேசிய தலைவர் பசும்பொன் பொன் முத்துராமலிங்க தேவர் முழு வாழ்க்கை வரலாற்று ஆவண படமான பசும்பொன் தேவர் வரலாறு தியேட்டரில் வெளியாவதற்கும், அதன் வெற்றிக்கும் என்னுடன் தோள் கொடுத்து தூக்கி விட்டு நம்பிக்கை தந்த அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதள, பண்பலை நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நெஞ்சார்ந்த நன்றி.

12 ஆண்டுகளுக்குப் பின் பத்திரிகையாளர் M.P.ஆபிரகாம் லிங்கன் இயக்கி, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் தயாரித்த தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முழு வாழ்க்கை வரலாற்று ஆவண படமான “பசும்பொன் தேவர் வரலாறு” இன்று மதியம் 1 மணிக்கு
BIG PRINT PICTURES Youtube சேனலில் ரிலீஸ் ஆகிறது.

இந்த ஆவண படத்தை பார்க்க எந்த கட்டணமும் செலுத்த தேவை இல்லை. உலகம் முழுக்க முழுமையான வரலாறு பார்க்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இன்று இணையத்தில் வரும் எங்கள் மகிழ்ச்சியை என் சக தோழமைகளோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.