சார்பட்டா பரம்பரையில் நடித்தது பற்றி நடிகர் பசுபதி

2

சார்பட்டாபரம்பரை படத்தில் நடித்துள்ள நடிகர் பசுபதி கூறியிருப்ப தாவது:

தமிழ் ரசிகர்கள் மட்டு மல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டா டுகிற படமாக நீலம் பிக்சர்ஸ் & K9 ஸ்டுடியோ தயாரிப்பில் பா. இரஞ்சித்தின் இயக்கத் தில் வெளிவந்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ சென்னையின் வாழ்வி யலையும் , பாக்சிங்கையும் களமாக கொண்ட யதார்த்தமான படைப்பை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டு கிறார்கள்.

தான் எடுத்து கொண்ட கதையை, சொல் நேர்த்தி.. செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர், பா.இரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமான வன்,நெருக்கமானவன்.

நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது.

என்னுடன் நடித்த அனைத்து கலைஞர் களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன் & K9 ஸ்டுடியோவுக்கும் என் நன்றிகள்.
ஏறக்குறைய 22 ஆண்டுகள் என்னுடைb திரை பயணத்தில் என்னுடன் பயணித்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் , தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், சக கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் , ஊடக நண்பர்களுக்கும் , சமூக வலை தளங்களுக்கும், குறிப்பாக உலகம் முழுவதும் இருக்கின்ற ரசிகர்களுக்கும் நன்றிகள் பல.

( நான் எந்த சமூக வலை தளங்களிலும் இல்லாததால் இந்த செய்தியை பி ஆர் ஓ ஜான்சன் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்
இவ்வாறு நடிகர் பசுபதி கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.