காதலர் தினத்தில் ’பழகிய நாட்கள்’ ரிலீஸ்

9

காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் ”பழகிய நாட்கள்”புதுமுகம் மீரான்,மேக்னா இயக்குனர் ஸ்ரீநாத்,சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்,நெல்லை சிவா,வின்சன்ட்ராய், சிவக்குமார் மற்றும் சுஜாதா இப்படத்தில் நடித்திருக்கின்றனர் .

மணிவண்ணனும் , விஜயகுமாரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.கபிலன் மற்றும் ராம்தேவ் வரிகளுக்கு ஜான்A. அலெக்ஸ், ஷேக் மீரா, லண்டன் ரூபேஷ் இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் ஐந்து பாடல்களுமே ஹிட் ஆகி கொண்டு வருகிறது.

 

இப்படத்தினை பற்றி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் ஆகிய ராம்தேவ் கூறியதாவது-
வெகு நாட்களுக்கு பிறகு 100% காதல் கதையாக பழகிய நாட்கள் காதலர் தினம் முன்னிட்டு திரைக்கு வருவது ஒரு சிறப்பாக நினைக்கிறேன் இப்படம் காதலித்தவர்கள் காதலிப்பவர்கள் காதல் செய்யப் போகிறவர்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது வெகு நாட்களாக பிரிந்திருந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்றுசேரும் இத்தருணத்தில் இப்படம் ரிலீஸ் ஆவதால் அவர்களுக்கான புத்துணர்ச்சி படமாக இது அமையும்.இப்படத்தை அவர்கள் பெற்றோர்களே பார்க்கச் சொல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் பாடிய பாடலுக்கு அவரே மாஸாக டான்ஸ் ஆடி உள்ளார் இப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பும் என்று ராம்தேவ் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.