‘தி பிரைட் ஷாப் – 2021’ எனும் காலண்டரை வெளியிட்டார் பி.சி.ஸ்ரீராம்

43

‘இன்று, எல்லார் கையிலும், ‘கேமரா மொபைல் போன்’ இருப்பதால், கலை அடுத்த கட்டத்திற்கு செல்லும்,” என, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கூறியுள்ளார்.

சென்னையில், 12 விதமான பாரம்பரிய திருமண ஆடைகளை, 12 மாடல் அழகிகளை வைத்து உருவாக்கப்பட்ட, ‘தி பிரைட் ஷாப் – 2021’ எனும் காலண்டரை, சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டார்.

இன்று, எல்லாருடைய கையிலும், கேமரா மொபைல்போன் இருப்பது, ஆரோக்கியமான விஷயம். ஒரு பெரிய இயக்குனர், 30 ஆண்டுகளுக்கு முன், ‘எப்போது எல்லாருடைய கையிலும், கேமரா கிடைக்கிறதோ, அப்போது, கலைக்கான மேடையாக அதை ஏற்றுக் கொள்வேன்’ என்றார். அது, இப்போது சாத்தியமாகி இருக்கிறது. யாருமே எதிர்பார்க்கவில்லை; இப்படி ஒரு புரட்சி நடக்கும் என்று. கலை, அடுத்த கட்டத்திற்கு போகும். இவ்வாறு, அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.